• Jan 19 2025

வணக்கம் மச்சான்ஸ்.. சின்னத்திரையில் பியூட்டி ஜட்ஜாக கம்பேக் கொடுத்த நமீதா!

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அழகிய தமிழ் மகன், பில்லா, நான் அவன் இல்லை படங்களில் சிக்குனு இருந்த நமீதா, ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போனார்.

தமிழே அழகான மொழி, அதுவும் நமீதாக வாயில் இருந்து கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழை கேட்கவே ஒரு கூட்டம் நமீதா பின்னாள் சுற்றிக்கொண்டு இருந்தது. 

ஒரு கட்டத்தில் மிகவும் உடல் அதிகரித்த நமீதா, மன அழுத்தத்தால் தான் தனது உடல் அவ்வாறு மாறியதாக,  பல பேட்டியில் கூறியிருந்தார். 


இவ்வாறு உடல் எடை அதிகரித்த நமீதாவிற்கு அதன் பிறகு படவாய்ப்பு குறைந்ததால்,  மானாட மயிலாடு நிகழ்ச்சிகளில் நடுவாராக இருந்தார். அதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். 

2017 ம் ஆண்டு நமீதா-வீரேந்திர சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் நமீதாவுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. பிறகு அரசியலிலும் ஈடுபட்டார்.


இந்த நிலையில், தற்போது சின்னத்திரையில் மீண்டும் கம்பேக் கொடுக்க உள்ளார் நடிகை நமீதா.

அதன்படி, ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி நிகழ்ச்சியில் மூன்று நடுவர்களில் ஒருவராக நடிகை நமீதாவும் கலந்து கொண்டுள்ளார்.

ஏற்கனவே, நடிகை சினேகா, சங்கீதா அதில் நடுவர்களாக இருக்கும் நிலையில், தற்போது நமீதாவும் கலந்து கொண்டது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement