• Jan 19 2025

இந்திய சினிமால கில்லி நான் தான்டா.. ஷாருக்கானை ஓவர்டேக் செய்து நிரூபித்த விஜய்! ட்விட்டரில் ட்ரெண்டிங் சாதனை விபரம் இதோ..

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விஜய் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் அண்மையில் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியதால் இன்னும் ஒரு சில படங்களுடன் தான் சினிமா துறையில் இருந்து ஒதுங்கி விடுவதாக அறிவித்திருந்தார்.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்ததாக 69 ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். ஆனால் விஜய்யின் 69வது படத்தை யார் இயக்குவது என்ற போட்டி தற்போது எழுந்துள்ளது.

ஆனாலும், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளான ஒரு படமாக விஜய்யின் 'கோட்' படம் காணப்படுகிறது. ஏனெனில் இதற்கு முன் அவர் நடித்த லியோ,வாரிசு, பீஸ்ட் ஆகிய மூன்று படங்களுமே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், தற்போது விஜய் நடிக்கும் கோட் படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், லைலா, சினேகா, ஜெயராம், மைக் மோகன், மீனாட்சி சவுதாரி, பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து  வருகிறார்கள். அத்துடன் மறைந்த நடிகர் விஜயகாந்தையும் AI தொழில்நுட்பத்தின் ஊடாக இணைத்துள்ளார்கள். இதன் மூலம் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.


இந்த நிலையில், தற்போது 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது . 

அதாவது, இந்தியாவில் கடந்த ஆண்டு ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் முன்னணியில் இருக்கும் நடிகர்களையும் குறிப்பிட்டுள்ளது.


அதன்படி 2023 ஆம் ஆண்டு twitter- ல் அதிகம் பேசப்பட்ட படங்களில் லியோ முதலாவது இடத்தில் காணப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக சலார், வாரிசு, துணிவு, ஜவான் ஆதிபுருஷ், பதான், டங்கி ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன.

அதேபோல ட்விட்டர் ஹேஷ்டேக்கில் ட்ரெண்டிங்கில் கடந்த வாரம் லியோ திரைப்பட மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அத்துடன் ஜவான் ஐந்தாவது இடத்திலும் பதான் ஆறாவது இடத்திலும் காணப்படுகிறது.

இவ்வாறு இந்திய அளவில் ஷாருக்கானை விஜய் முந்திவிட்டார் என விஜய் ரசிகர்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement