• Jan 19 2025

நான் தோல்வி அடைந்துவிட்டேனா? பாஜகவில் கட்சியை இணைத்தது தொடர்பில் சரத்குமார்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் சரத்குமார் நேற்றைய தினம் பாஜகவில் இணைந்துள்ளார். இவ்வாறு மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் சரத்குமார் பாஜகவுடன் தனது கட்சியை இணைத்துள்ளது அரசியல் களத்தில் பெரும் பேசுப் பொருளாக உள்ளது.

நடிகர் சரத்குமார் தனது அரசியல் பயணத்தை திமுக கூட்டணியில் ஆரம்பித்தார். அதன் பின் அதிமுகவில் இணைந்தார். அதிமுகவிலிருந்து விலகி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை கடந்த 2007 ஆம் ஆண்டில் ஆரம்பித்தார்.

இக்கட்சி 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தென்காசி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது . ஆனாலும் அதில்  உட்கட்சிப் பூசல்களால் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது.


அதன் பின் 17 ஆண்டுகளாக அகில இந்திய சமத்துவ மக்கள் என்ற அரசியல் கட்சியைநடத்தி வந்த நிலையில், இன்று திடீரென அவர் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளார்.


இந்த நிலையில், தற்போது 'தோல்வி அடைந்துவிட்டேன் என பேசினாலும் கவலையில்லை' கூறியுள்ளார் சரத்குமார்.

அதன்படி அவர் கூறுகையில், தோல்வி அடைந்துவிட்டேன் என பேசினாலும் கவலையில்லை. தேர்தல் வரும்போதெல்லாம் கூட்டணி என்ற பேச்சுதான் மேலோங்கி நிற்கிறது என்பதை மறுக்க முடியாது. பதவி இருந்தால்தான் மக்கள் பணியாற்ற முடியும் என்பது உண்மைதான் கூட்டணி பேச்சும் அதற்கு மட்டும்தான் நாம் பயணிக்கிறோமா என்ற எண்ணமும் அமைதியை இழக்கச் செய்தது.  என் பயணத்தில் நான் தோல்வி அடைந்துவிட்டேன் என பிறர் பலவிதமாக பேசினாலும் கவலையில்லை என கூறியுள்ளார்.




Advertisement

Advertisement