• Jan 19 2025

ஹீரோயினாக களமிறங்கும் கயல் சீரியல் நடிகை! இனி சின்னத்திரைக்கு முழுக்கா?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பல ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வரும் தொலைக்காட்சிகளில் ஒன்று தான் சன் தொலைக்காட்சி.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முக்கிய இடத்தில் உள்ள சீரியல் தான் கயல் சீரியல்.

குறித்த சீரியலில், கயல் ரோலில் நடிகை சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். அவரது அமைதியான காதலன் எழிலரசனாக ராஜா ராணி புகழ் சஞ்சீவ் கார்த்திக் நடிக்கிறார்.


அத்துடன், கயல் என்ற பெண், அப்பா இல்லாத தனது குடும்பத்தை காப்பாற்ற எப்படி போராடுகிறாள், அதனை அழிக்க அவரது பெரியப்பாவின் குடும்பத்தினரும், அவள் மீது கொண்ட ஆசையால் கயல் வேலை பார்க்கும் மருத்துவமனையின் தலைமை மருத்துவரும் என்னென்ன சதித்திட்டங்களை தீட்டுகிறார்கள் என்பதை அதிரடி திருப்பங்கள் மற்றும் விறுவிறுப்பான காட்சி அமைப்புடன் ஒளிபரப்பி வருகின்றது.


இந்த நிலையில், கயல் சீரியல் நடிகை அண்மையில் அளித்த பேட்டியொன்றில், விரைவில் வெள்ளித்திரையில் மெயின் ரோலில் நடிக்க இருக்கிறேன் என கூறி இருக்கிறார்.

ஏற்கனவே சைத்ரா ரெட்டி அஜித்தின் வலிமை படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து இருந்தார்.

தற்போது ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement