• Jan 19 2025

கோபியை டீலில் விட்ட ராதிகா; பாக்கியாவுக்கு மினிஸ்டர் வைத்த ஆப்பு? எஸ்கேப்பாக பிளான் போடும் கல்யாண பொண்ணு!

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி. இந்த இரண்டு சீரியல் மெகா சங்கமும் என்ற பெயரில் ஒரு மணி நேரம் ஆக இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது. 

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்குது என்று பார்ப்போம், அதில் ஜெனியின் அப்பா கார்ட் கொடுத்துவிட்டு செல்ல, ஈஸ்வரி கோவத்தில், நம்ம பெயர் கூட கார்ட்ல இல்லை, இவங்க எப்படி பங்ஷன் செய்றாங்க என பார்ப்போம் என்று பேசுகிறார்.


மறுபக்கம், கோபி ரோட்டில் நின்று போன் பேசிக் கொண்டு இருக்க, அந்த வழியால் வந்த பாண்டியன் ஹாரன் அடிக்க இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படுகின்றது.


இன்னொரு பக்கம், பாக்கியா, செல்வி, அமிர்தா மூவரும் மக்ரோனி ரொம்ப ஃபேமஸ் அதை ஒரிஜினலா செய்ற இடத்துல போய் பார்த்து எப்படி செய்வது என்று கற்றுக் கொள்ளணும் சமையல் பற்றி யோசித்துக் கொண்டு இருக்க, அங்கு கோமதியும் மீனாவும் வந்து தம்மை பற்றி அறிமுகம் செய்கின்றார்கள்.


இதன்போது, பாக்கியா கேட்டரிங் சர்வீஸ் நடத்துவதும் இங்கே சமைக்க வந்த விஷயத்தை செல்வி சொல்ல, கோமதி தன்னுடைய அண்ணன் பொண்ணுக்கு கல்யாணம் இரண்டு வீடும் பேசுவதில்லை என்று குடும்ப பிரச்சனையை சொல்லி வருந்துகிறார்.


இதையடுத்து, ராஜிக்கு கண்ணன் போன் போட்டு நீ எனக்கு கல்யாணம் பண்ண இல்லாட்டி  செத்து போயிடுவேன் நீ தான் காரணம் என லெட்டர் எழுதி வைப்பேன், நாளைக்கு நாம போறதுக்கு எல்லாம் ரெடி பண்ணியாச்சு என்று மிரட்டி போனை வைக்கிறான். 


இதை தொடர்ந்து, ரூமில் ராஜி இருக்க, அங்கு ராதிகா சென்று ஏன் ஒரு மாதிரி இருக்கா, ஏதும் பிரச்சனை என்றா எங்கிட்ட சொல்லு என கேட்க, ஒன்றும் இல்லை என சொல்லுகிறார். சரி என்று ராதிகா வெளியில் வரும் போது, கோபி உங்க அண்ணன்கள் எல்லாரும் என்ன சாப்பிடுறாங்க, பாசமா கட்டிப் பிடிச்சாலே உடம்பு நோகுது என சொல்ல, ராஜிய பாத்தீங்களா ஒரு மாதிரி இருக்கா என சொல்லுகிறார்.


பாக்கியா சமையல் செய்ய ஆரம்பிக்க, மினிஸ்டர் அனுப்பிய பெண்கள் டீ குடித்துக் கொண்டு பேசிக் இருக்க, பாக்கியா அவர்களை அழைத்து வேலை கொடுக்கிறார். எனினும் அவர்கள் ஒழுங்காக வேலை செய்யாமல் இருக்க, இவங்களை வைத்து எப்படி வேலை செய்வது என யோசிக்கிறார்.


அத்துடன், கோபி வெளியில் வந்து ஒரு நாள் முடியவே ரொம்ப கஷ்டமா இருக்கு, இன்னும் 2 நாள் எப்படி இருக்க போறனோ என்று யோசிக்க, அங்கு வந்த ராதிகாவின் பெரிய அண்ணன் நீங்க பேசாம இங்கையே வந்துடுங்க என பேசுகிறார்.


அந்த நேரத்தில், பாண்டியன் வெளியே வர கல்யாண அலங்காரம் எல்லாம் எப்படி இருக்கு 3000 பேர் கல்யாணத்துக்கு வர போறாங்க, இந்த மாதிரி யாராவது கல்யாண பண்ண முடியுமா? கல்யாண செலவே இல்லாம பொண்ணை இழுத்திட்டு வந்து தான் சிலர் கல்யாணம் பண்றாங்க என செந்தில் கதையை பேசி பாண்டியனை வெறுப்பாக்குகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது. 



Advertisement

Advertisement