• Jan 18 2025

"அவர் இல்லை என்று சொல்ல கூட வாய் கூசுகிறது" இயக்குனர் சிகரத்தின் பிறந்தநாளில் கமல்ஹாசனின் வீடியோ !

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகம் தாண்டி இந்திய திரைத்துறையின் முக்கிய ஆளுமைகளை வரிசைப்படுத்த வேண்டுமெனில் எந்த நிலையிலும் மறக்கவோ மறுக்கவோ முடியாத ஆளுமையான இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் 94 வது பிறந்த தினம் இன்றாகும்.

Top K Balachander movies you can watch ...

பாலச்சந்தர் நம்மை விட்டு சென்று 10 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் அவரது கலை சேவை இன்றும் ரசிகர் மனங்களில் அவரை மறக்க முடியாத ஓர் இடத்தில்  வைத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.இந்நிலையில் பாலச்சந்தரின் பிறந்த தினமான இன்று அவரது சீடன் உலக நாயகன் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

Kamal Haasan says Balachander donated ...

குறித்த வீடியோவில் கே.பாலச்சந்தர் பற்றிய நினைவை பகிரும் கமல்ஹாசன் அவரது கலைச் சேவையையும் புகழ்ந்து பேசியதோடு  அவரின்றி நானில்லை என்று குருவிற்கு தலைவணங்கினார்,மேலும் அவர் பேசுகையில் "அவர் இல்லை என்று சொல்ல கூட வாய் கூசுகிறது" என்று கூறியிருந்தார்.மேலும் அவருடனான நினைவுகளை பகிர்ந்த உலக நாயகன் குருவிற்கு பணிந்து நின்றார்.


Advertisement

Advertisement