• Jan 19 2025

இந்தியன் 2 வசூல் 630 கோடினா... வேட்டையன் 730 கோடினு போஸ்டர் அடிப்போம்! உளறிய பிரபலம்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது வெளியாகும் திரைப்படங்கள் விமர்சன ரீதியிலும், வசூல் வீதியிலும் மக்களின் வரவேற்பை பெறுவது மிகவும் பெரிய விடயமாக பார்க்கப்படுகின்றது.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியான திரைப்படங்கள் அத்தனையுமே தோல்வியை தழுவிய நிலையில், மலையாள திரைப்படங்கள், ஹிந்தி, தெலுங்கு என பிற மொழிகளில் வெளியான திரைப்படங்கள் நல்ல வரவேற்பையும் பெற்று விமர்சன, வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து இருந்தன.

எனினும் தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தும் வகையில் சுந்தர் சியின் அரண்மனை 4 , சூரி நடிப்பில் வெளியான கருடன் மற்றும் சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படமும் 100 கோடி ரூபாயை கடந்து வசூலில் சாதனை படைத்திருந்தன.

இந்த நிலையில், தற்போது பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் ரஜினி, கமலை வம்பலுக்கும் வகையில் தற்போது மீண்டும் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


அதாவது, கமல் நடித்த விக்ரம் படத்தின் வசூல் 430 கோடியாம். அதனால ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 530 கோடின்னு அடித்து விடுவோம். 


இதனால் கமலஹாசன் நடிப்பில் தற்போது ரிலீசுக்கு தயாரான இந்தியன் 2 வசூல் 630 கோடினு இப்பவே போஸ்டர் ரெடி பண்ணி வச்சிடுவோம் என்றும் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து ரஜினி படமான வேட்டையன் 730 கோடியும், கமலஹாசனின் அடுத்த படமான தக்லைஃப் 830 கோடி எனவும் ஆளாளுக்கு போட்டி போட்டு வசூல்களை கூறி வருவதாக நேரடியாகவே சுட்டிக்காட்டியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

தற்போது ப்ளூ சட்டை மாறன் போட்ட இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன. மேலும் இதை பார்த்து கோபம் அடைந்த கமல், ரஜினி ரசிகர்கள் அவருக்கு எதிராக கமெண்ட் பண்ணி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement