சின்னத்திரை நடிகை பிரியங்கா நல்காரி அவர்கள் அவர்களுடைய கணவரை விட்டு பிரிந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அவரே தனது ரசிகர் கேள்விக்கு ஆமா என்று பதிலைத்துள்ளார். இது உண்மையா அல்லது வதந்தியான செய்தியா என்பதை பார்ப்போம் வாங்க.

சன் டிவி ரோஜா சீரியல் மூலமாக பிரபலமானவர் தான் ப்ரியங்கா நல்காரி அவர்கள். ரோஜா சீரியலுக்கு அப்புறம் அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. அடுத்ததாக அவர் ஜீ தமிழில் சீதா ராமன் சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியல் நடித்து கொண்டிருக்கும் வேளையிலே பிஸ்னஸ் மேன் ராகுல் வர்மா அவர்களை 2023ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களில் காதலை 2 பேர் வீட்டிலும் ஏற்றுகொள்ளவில்லை அதனால் இருவரும் கோவிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்கள். அதற்கு பிறகு தனது கணவருடன் இருப்பதற்காக சீதா ராமன் சீரியலில் இருந்து கூட இடையில் விலகிவிட்டார். அதன் பிறகு தற்போது நலன் தமயந்தி சீரியலில் நடித்து வருகிறார்.

அவரின் கணவர் மலேஷியாவிலும் ப்ரியங்கா சென்னையிலும் இருப்பதனால் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப் தான் மெய்ன்டன் செய்கின்றனர். அதில் இடையில் ப்ரியங்கா மலேஷியா சென்று தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களையும் ஷேர் செய்து வந்தார்.

இந்நிலையில் தற்போது அவரின் இன்ஸராகிறேம் பக்கத்தில் அவர் வெளியிருந்த தனது கணவருடனான புகைப்படங்களை டிலீட் செய்துள்ளார். ஒரு ரசிகர் நீங்கள் சிங்களா என்று கேட்டதற்கு ஆமாம் என்று பதிலளித்துள்ளார். இந்த விடையங்கள் தன இவர்களை பிரிந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!