• Dec 12 2024

மீண்டும் களத்தில் இறங்கும் ஜீவா.. முக்கிய பாயிண்டை பிடித்த முத்து! அதிர்ச்சியில் ரோகிணி

Aathira / 6 days ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், பார்வதி சொன்ன விஷயத்தை முத்துவிடம் மீனா சொல்லுகின்றார். இதை கேட்ட முத்து அந்த பார்லரம்மா அப்படியெல்லாம் செய்ற ஆள் கிடையாது. இதுல ஏதோ வில்லங்கம் இருக்குது என்று சொன்னதோடு, இப்ப ஒருவர் ஒரு பொருள் எடுத்தால் அதை மாட்டிக்க போறோம் என்று தெரிந்ததுமே அதை திருப்பிக் கொடுப்பாங்க... அப்படித்தான் இருக்குது என்று பாயிண்டை பிடிக்கின்றார்.

இதை தொடர்ந்து மீனா கிச்சனில் இருக்க, அங்கு வந்த ஸ்ருதி தனக்கு ஆம்லெட் போட்டு தருமாறு சொல்லுகின்றார். அப்போது ரோகிணி வர, தனக்காக காசு கொடுத்ததற்கு நன்றி என்று ரோகினிக்கு மீனா சொல்லுகிறார். இதைக் கேட்டு ரோகிணி அதிர்ச்சி அடைகின்றார்.

d_i_a

மேலும் பார்வதி ஆண்டி கிட்ட சொல்ல வேணாம் என்று சொன்னேன். அவங்க சொல்லிட்டாங்களா என்று கேட்கவும், என் மேல தப்பு இல்ல என்று எல்லாருக்கும் தெரியும் பிறகு எதுக்கு நீங்க காசு கொடுத்தீங்க என்று கேட்க, இந்த குடும்பத்தில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காகத்தான் கொடுத்தேன் என்று சொல்லி எஸ்கேப் ஆகின்றான்.


அதன் பின்பு முத்து வந்து சொன்ன மாதிரி பேசினியா? ரோகிணியின் ரியாக்ஷன் எப்படி இருந்தது? என்று கேட்க, அவங்க முகமே வேற மாதிரி போயிட்டு என்று மீனா சொல்லுகின்றார். இதனால் அவங்க லைஃப்ல ஏதோ வில்லங்கம் இருக்குது அதை கண்டுபிடிக்கணும் என்று முத்து சொல்லுகின்றார்.

அதே நேரத்தில் முத்துவுக்கு ஜீவா போன் பண்ணி தான் கனடாவில் இருந்து வருவதாக சொல்ல,  நீங்க வந்துட்டு கால் பண்ணுங்க நான் வந்து ஏர்போர்ட்டில் ஏற்றிக் கொள்கிறேன் என்று முத்து சொல்லுகின்றார்.

இன்னொரு பக்கம் விஜயாவின் படத்தை ஒருவர் விற்றதோடு  அதனை மனோஜின் கடைக்கு வந்து விற்கின்றார். இதை பார்த்து ரோகிணியும் மனோஜும் அதிர்ச்சி அடைகின்றார்கள். ஆனாலும் அவர் இது ஆந்திராவில் பேமஸ் ஆன உக்கிர காளி என்று அந்த போட்டோவை கொடுக்க, இது எனது அம்மாவின் போட்டோ என்று மொத்தமாக வாங்கி விடுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement