• Jan 18 2025

எல்லாம் முடிஞ்ச பிறகு ஆடி அசைஞ்சு வாரியா? விலகிய கோபி! பாக்கியாவுக்கு தலையிடி

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், கோபியை பார்க்க ஏன் ஹாஸ்பிடல் வரவில்லை என்று ஈஸ்வரி பாக்கியாவை கேட்கின்றார். மேலும் கோபி ஹாஸ்பிடலில் இருந்து இந்த வீட்டுக்கு தான் வருவான் என்று ஈஸ்வரி சொல்ல, அது ஒரு நாளும் நடக்காது என்று பாக்கியா சொல்லுகின்றார்.

ஆனாலும் ஈஸ்வரி எனது பிள்ளையையும் இழக்க முடியாது அதனால் கோபி நேரா இந்த வீட்டுக்கு தான் வருவான் என்று சொல்ல, யார் என்ன சொன்னாலும் அவர் இந்த வீட்டுக்கு வரக்கூடாது என்று உறுதியாக பாக்கியா சொல்லுகின்றார். ஆனாலும் ஈஸ்வரி பிடித்த பிடிவாதமாக இருக்கின்றார்.

d_i_a

அதன் பின்பு செழியனை அழைத்து கோபியின் டிரீட்மென்ட் செலவுக்கு காசு கொடுக்கின்றார் ஈஸ்வரி. ஆனால் செழியன் அதை வாங்காமல் தான் பார்த்துக் கொள்வதாக சொல்லுகின்றார். இதனால் எப்படி காசு கொடுப்பாய் என்று ஜெனி கேட்க, ஷேவிங்கில் இருக்கின்ற பணத்தை கொடுப்பேன் என்று சொல்லுகின்றார்.


இதனால் அன்னைக்கு அம்மாவுக்கு பிரச்சினை வரும்போது நீ அந்த காசை எடுக்கவில்லை. இப்ப அப்பாவுக்கு என்று எடுக்குறீயா என ஜெனி கேட்கிறார். ஆனாலும் இது உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்று செழியன் சமாளித்து செல்கின்றார்.

இதை தொடர்ந்து ஹாஸ்பிடலில் எழில் இருக்க, அங்கு ராதிகா செல்லுகின்றார். கோபியை பார்த்ததும் முதலில் தலையை திருப்பிக் கொண்ட கோபி, தனக்கு ஒன்று என்றால் மொத்த குடும்பமும் இருக்குது. நீ ஆடி அசைந்து வருகிறாயா? உன்னை எவ்வளவு நம்பினேன் என்று மனம் நொந்து பேசுகின்றார். ஆனாலும் ராதிகா தான் வந்த போது உங்களுடைய குடும்பம் பார்க்கவிடவில்லை என்று சொல்லுகின்றான்.

எனினும் தனக்காக மொத்த குடும்பமும் இருப்பதாகவும் பாக்கியாவும் எனக்காக ஹாஸ்பிடலில் இருந்ததாகவும் சொல்ல, அந்த நேரத்தில் அங்கு வந்த ஈஸ்வரி, ராதிகா நிற்பதை பார்த்து அவரை வெளியே போகுமாறு விரட்டுகின்றார். அது மட்டும் இல்லாமல் கோபி முன்னிலையில் நீ ஒவ்வொரு முறையும் வந்து சண்டை போட்டதால் தான் பார்க்க விடவில்லை என்று பிளேட்டை மாற்றுகின்றார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement