• Jan 19 2025

தீபாவளி ரேஸில் இணைந்த ஜெயம் ரவி.. கவின் தாக்குபிடிப்பாரா?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனாக்கானும் காலங்கள், சரவணன் மீனாட்சி ஆகிய சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டவர் தான் நடிகர் கவின்.

இதை தொடர்ந்து தற்போது தனக்கு தகுந்த திரைக்கதைகளை தேர்வு செய்து சிறப்பாக நடித்து வருகின்றார். அதன்படி தற்போது இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் பிளடி பேக்கர்.

2021 ஆம் ஆண்டு கவின் நடிப்பில் வெளியான லிப்ட்  திரைப்படம் இவருக்கு சிறந்த திரைப்படமாக அமைந்தது. அதன் பின்பு வெளியான டாடா திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றதோடு ஹிட் லிஸ்டிலும் இணைந்தது. இந்த படத்திற்கு பிறகு தான் கவினின் மார்க்கெட்டும் உயர்ந்தது.

டாடா படத்தின் வெற்றியால் தனக்கு கிடைத்த பெயரை சரியாக பயன்படுத்திக் கொண்டு தற்போது வரையில் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகின்றார். இதை தொடர்ந்து கவின் நடிப்பில் இறுதியாக வெளியான ஸ்டார் படமும் பெரிய அளவில் வெற்றி பெற்று இவரது புகழை உயர்த்தியது.


இதைத் தொடர்ந்து கவின் நடிப்பில் ப்ளடி பேக்கர் படம் எதிர்வரும் தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. நேற்றைய தினம் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படமும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் சிவகார்த்திகேயனோடு கவின் மோதுகின்றாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்த நிலையில் தற்போது ஜெயம் ரவி நடிக்கும் பிரதர் திரைப்படமும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இதனால் சிவகார்த்திகேயன், கவின், ஜெயம் ரவி ஆகியோரின் படங்கள் தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement