• Sep 17 2024

குட் பேட் அக்லி படத்திலும் த்ரிஷாவா? என்னடா சொல்லுறீங்க.. வெளியான அதகள அப்டேட்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக காணப்படும் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி படத்தின் நடித்து வருகின்றார். அவருடைய 63 வது படமாக குட் பேட் அக்லி படம் காணப்படுகிறது.

இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். மேலும் இதனை மைதிலி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படம் இதில் வரும் 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என கூறப்படுகிறது.

ஐதராபாத்தில் படப்பிடிப்பு தற்போது 90 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. அடுத்ததாக படக்குழு, இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறது. அதன்படி  இப்படத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் ரஷ்யாவில் ஆரம்பிக்கப்படும் என கூறப்படுகிறது.


இந்த நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன்  இயக்கத்தில் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தில் திரிஷா இணைந்து நடிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் த்ரிஷா நடித்து வருவதாக கூறப்படுகின்றது. தற்போது குட் பேட் அக்லி  படத்திலும் நடிப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து முடிந்து விட்டதாகவும் இப்படத்தில் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கும் எனவும் அதில் அஜித்துடன் த்ரிஷா இணைந்து நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement

Advertisement