• Jan 19 2025

மனைவியை விவாகரத்து செய்கிறாரா ஜெயம் ரவி? ஆர்த்தியின் நன்றி அறிவிப்பு..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் ஜிவி பிரகாஷ் தனது மனைவியை பிரிவதாக அறிவித்த நிலையில் அடுத்ததாக ஜெயம்ர வியும் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரை உலகை பொருத்தவரை தனுஷ் - ஐஸ்வர்யா, ஜிவி பிரகாஷ் - சைந்தவி உள்பட பலர் சமீப காலமாக விவாகரத்து செய்வதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக கூறப்படும் நிலையில் இது குறித்து ஜெயம் ரவி எந்த பதிலும் சொல்லவில்லை.

ஆனால் அவருடைய மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ’ஜெயம்’ படத்தின் போஸ்டரை பதிவு செய்து ’காதல் என்னும் வார்த்தை, அது வார்த்தை அல்ல வாழ்க்கை’ என்று பதிவு செய்து விவாகரத்து குறித்த வதந்திக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

’ஜெயம்’ படம் ரிலீஸ் ஆகி 21 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிப்பிடும் வகையில் உருவாக்கப்பட்ட போஸ்டரை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஆர்த்தி, ‘தனக்கும் தனது கணவருக்கும் உள்ள காதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பதை மறைமுகமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் ஜெயம் ரவி - ஆர்த்தி குறித்த விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தியை திருமணம் செய்தார் என்பதும் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ஏற்கனவே ’டிக் டிக் டிக்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் அவர் எதிர்காலத்தில் ஒரு பெரிய ஹீரோவாக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement