• Jun 27 2024

கருட சிம்மாசனம் போட்டு வசூலை அள்ளிய சூரியின் படம் ஓடிடிக்கு ரிலீஸ்?

Aathira / 6 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடியனாக கலக்கி வந்து நடிகர் சூரி, தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்.

நடிகர் சூரி, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது நடிப்பும் இவரது கடின உழைப்பும் பெரிதும் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் நடிகராக அவதாரம் எடுத்தார்.

தற்போது துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடித்த அடுத்த திரைப்படம் தான் கருடன். இந்த படத்தில் ஆக்சன் ஹீரோவாக மிரட்டிய சூரியின் நடிப்பை பார்த்து பலரும் பிரமித்து போய் உள்ளார்கள்.


இதுவரையில் கிட்டத்தட்ட 50 கோடி வரை வசூலித்த கருடன் திரைப்படத்தில் உன்னி முகுந்தன், சசிகுமார் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தார்கள்.

இந்த நிலையில், கருடன் திரைப்படம் விரைவில் ஓடிடி தளத்தில்  ரிலீஸ் ஆக உள்ளது. இதன் ஓடிடி உரிமத்தை அமேசன் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளதோடு, இந்த படம் ஓடிடியில் ஜூலை மாதத்தின் முதல் வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement