• Dec 04 2023

ரொம்ப கொடூரமாக இருக்கே,ஒரு பையனை தோற்கடிக்க இப்படியொரு முடிவா?- பிரதீப்புக்கு ரெட்காட் கொடுத்ததால் கடுப்பான தொகுப்பாளினி ப்ரியங்கா

stella / 4 weeks ago

Advertisement

Listen News!


பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தால் பெண்களுக்கு ஆதரவு இல்லை என கமல்ஹாசன் அவரை வீட்டில் இருந்து வெளியே அனுப்பி உள்ளார். அதற்கு எதிராக ஏகப்பட்ட ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், கவின் மற்றும் சினேகனும் தங்களது கருத்தை போல்டாக பதிவிட்டுள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் நிக்சன் உடன் ரொமான்ஸ் செய்யும் ஐஷு, மணிசந்திராவுடன் இடுப்பில் ஏறி அமரும் ரவீனா தாஹா பொதுமேடையில் பெண் தொகுப்பாளினியை ஹராஸ் செய்த கூல் சுரேஷை பிக் பாஸ் வீட்டில் இடம் கொடுத்து விட்டு அவர்கள் எல்லாம் கொடுத்த புகாரின் பேரில் கமல் பிரதீப் ஆண்டனியை வெளியே அனுப்பியது முற்றிலும் தவறு என பல பிக் பாஸ் விமர்சகர்களே விமர்சித்துள்ளனர்.


இதனால் தொடர்ந்து பிரபலங்களும் தமது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில்  குறிப்பாக நேற்றைய தினம் அமீர் மற்றும் பாவனி இது தவறானது என்று சொல்லியிருந்தனர். இதனை அடுத்து தற்பொழுது ப்ரியங்காவும் நொட்கூல் என்று தெரிவித்துள்ளார். இதிலிருந்து ஒரு பையனை தோற்கடிக்க தவறான முறையை போலோ பண்ணியிருக்காங்ளே எனத் திட்டியுள்ளார்.


இவரைத் தொடர்ந்து பிக்பாஸ் பிரபலமான நிரூப்பும் ரொம்ப கொடூரமாக இருக்கு, எனக்கு உங்களை தான் எனக்கு பிடிக்கும் பிரதீப்.உங்களை எப்படி காலி பண்ணுறது என்று தெரியாமல் பண்ணியிருக்கிறாங்க என்று சொல்கின்றார். அத்தோடு பிக்பாஸ் பிரபலமான நிவானியும் முதுகில குத்திட்டாங்களே,இது தவறான முடிவு என்று விமர்சித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement