• Nov 13 2025

நோட் கூல் பிக் பாஸ்... ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப்... ஆதரவு தெரிவிக்கும் பிரபலங்கள்...

subiththira / 2 years ago

Advertisement

Listen News!

ரெட் கார்டு கொடுத்து பிரதீப் ஆண்டனி நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவருடைய வெளியேற்றம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது நியாயமான எலிமினேஷன் அல்ல, இது மிகவும் தவறு, பிரதீப் ஒரு நல்ல போட்டியாளர் என பலரும் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.


இந்நிலையில் இதில் நடன இயக்குனரும், பீஸ்ட் பட நடிகருமான சதீஸ் தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்தது தவறு என்றும், உண்மையாவே பெண்களுக்கு பிரதீபால் பாதுகாப்பு இல்லையா? பிரதீப் மட்டுமே கெட்ட வார்த்தைகளை பிக் பாஸ் வீட்டிற்குள் பயன்படுத்த வில்லை, மற்றவர்களும் தான் பேசுகிறார்கள். என கூறி தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.


மேலும் பிக் பாஸ் சீசன் 5ன் போட்டியாளரான நிரூப் தனது டுவிட்டர் தளத்தில்  'இது unfair' என பதிவு செய்துள்ளார் மேலும் உங்களை நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றுவதற்கான ஒரே கொடூரமான மற்றும் நியாயமற்ற வழியாகும். அவர்கள் உங்கள் நிலைப்பாட்டை உணர்ந்தார்கள்.


அத்தோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பற்றி இருந்த விஜய் டிவி பிரபல தொகுப்பாளினி பிரியங்கா அவர்கள் நோட் கூல் என பதிவிட்டுள்ளார்.


பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிரதீப் அவர்களுக்கு பலரும் ஆதரவளித்து வருகின்றனர். இந்த விஷயம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

Advertisement

Advertisement