• Nov 06 2024

இந்த குழந்தை யாரு தெரியுமா? ஒரு காலத்தில் இளைஞர்களை பித்துபிடித்து அழையவிட்ட நடிகை

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர் தான் சுனைனா ஜெல்லா. ஆரம்பத்தில் மாடலிங்கில் இறங்கியவர் தொடர்ந்து மேடை நாடகங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார். அதன் பிறகு 2005 ஆம் ஆண்டு வெளியான குமாரி vs குமாரி என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

இதை தொடர்ந்து மலையாளத்தில் 10த் கிளாஸ் என்ற படத்திலும் அதன் பின்பு கன்னடம், தமிழ் என அடுத்தடுத்து படங்களில் அறிமுகமானார். தமிழில் இவர் நடித்த காதலில் விழுந்தேன் என்ற படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதிலும் இந்த படத்தில் இடம்பெற்ற தோழியா என் காதலியா.., நாக்க முக்க.., உன் தலைமுடி உதிர்வதைக் கூட போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தன.

d_i_a

இதைத்தொடர்ந்து மாசில்லா மணி, வம்சம், நீர் பறவை,  திருத்தணி, சமர்  என அடுத்தடுத்து பட வாய்ப்புகளை அள்ளி எடுத்தார் சுனைனா. இவ்வாறு ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டர்களை ஏற்று நடித்த சுனைனாவிற்கு ஒரு சில ஆண்டுகளிலேயே பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது.


கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ரெஜினா திரைப்படம் ஓரளவு பாராட்டைப் பெற்றாலும் அந்தப் படமும் கை கொடுக்கவில்லை. அதன் பின்பு அமேசன் பிரைமில் வெளியான இன்ஸ்பெக்டர் ரிஷி என்ற வெப் தொடருக்கு பிறகு சுனைனாவின் எந்த ஒரு படமும் அப்டேட் ஆகவில்லை.

இந்த நிலையில், சுனைனா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது சிறிய வயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் இது சுனைனாவா என வியப்பாக கேட்டு வருகின்றார்கள்.

Advertisement

Advertisement