• Jan 18 2025

11 வருசமா ரிலீஸ் ஆகாம இருக்கு.. எல்லாத்துக்கும் ப்ரொடியூசர் தான் காரணம்! ஆவேசத்தில் சுந்தர். சி பேட்டி

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அன்பே சிவம், கலகலப்பு போன்ற அருமையான திரைப்படங்களை கொடுத்தவர் தான் இயக்குனர் சுந்தர்.சி. இவர் இயக்கத்தில் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படம் தான் அரண்மணை  படத்தில் நான்காவது பாகம்.

அரண்மணை நான்காவது பாகத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வெளியீட்டு விழாவின் போது கலந்து கொண்ட சுந்தர் சி இடம், அவர் இயக்கத்தில் தயாராகி இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கும் 'மத கஜ ராஜா' திரைப்படம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதாவது, விஷால், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம் என பல சினிமா நட்சத்திரங்கள் நடித்துள்ள  படம் தான் மத கஜ ராஜா. இந்த படம் 2013 ஆம் ஆண்டு தயாரித்து முடிக்கப்பட்டது. ஆனால் இன்றளவும் மட்டும் ரிலீஸ் செய்யப்படாமல் உள்ளது. இதன் அதிகாரப்பூர்வ டிரைலர் மற்றும் பாடல்கள் அனைத்தும் யூடிபில் வெளியானது.  


இவ்வாறு கிட்டத்தட்ட 11 வருடங்களாக ரிலீஸாகாமல் இருக்கும் மத கஜ ராஜா படத்தை பற்றி சுந்தர்.சி யிடம் கேட்ட போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


தயாரிப்பாளர் தான் பிரச்சனை. அவர் தனது பழைய கடன் பிரச்சினையால் ரிலீஸ் செய்யாமல் வைத்துள்ளார். இப்போது வெளியிட்டால் கூட நல்ல லாபம் தரக்கூடிய திரைப்படம் தான். மத கஜ ராஜா நானும் விஷாலுமே கூட அவரிடம் கெஞ்சி பார்த்து விட்டோம் நாங்கள் காசு கொடுத்து வாங்குகிறோம் தாருங்கள் என்றும் கூறினார். ஆனால் அதற்கு அவர் ஒத்துக் கொள்கிறார் இல்லை. அவர் மனசு வைத்தால் தான் இந்த படம் ரிலீஸ் ஆகும் என ஆதங்கத்துடன் கூறியுள்ளார் சுந்தர்.சி.

Advertisement

Advertisement