• Dec 03 2024

மொத்தமா பிளேட்டை திருப்பிப் போட்ட ஈஸ்வரி.. ஆனந்த் கண்ணீரில் பாக்கியா!

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், ரெஸ்டாரண்டில் இருக்கும் அமிர்தாவும் செல்வியும் என்ன ஆச்சு என தெரியல போன் கூட எடுக்கல என்று பேசிக் கொண்டிருக்க, அங்கு வந்தஎழிலும் பாக்கியம்யாவும் நடந்தவற்றைச் சொல்ல அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.

இதன்போது ஜெனி பிரச்சனை,அமிர்தா பிரச்சனை என எல்லாத்தையும் தீர்த்து வச்சிட்டியே அக்கா. இந்த மாதிரி ஒரு மாமியார் கிடைக்க நீங்க எல்லாம் கொடுத்து வச்சிருக்கணும் என  சொல்ல, எழில் சரியா சொன்னிங்க அக்கா என்று சொல்லி சந்தோஷப்படுகிறார்.


அதன் பிறகு ராமமூர்த்தியும் பாக்கியாவும் செழியன், ஜெனி சேர்ந்ததை பற்றி பேசிக்கொண்டிருக்க கிச்சனில் ராதிகாவும் அதை கேட்டுக் கொண்டிருக்கிறார். சோபாவில் இவர்கள் பேசுவதை கேட்டு ஈஸ்வரி உடனே எழுந்து வந்து,செழியனுக்கு  இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்க போறேன்னு சொன்னதால தான் இந்த பிரச்சனை தீர்ந்துச்சு. என்ன பண்ணினா என்ன நடக்கும் என்று எனக்கு தெரியும் என்று பிளேட்டை மொத்தமாக திருப்பி போடுகிறார்.

இதை தொடர்ந்து நீங்க செழியன், ஜெனிய சேர்த்து வைக்க ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கீங்க. ஆனா அத்தை எல்லாத்தையும் அவங்க செய்த மாதிரி பேசிட்டு போறாங்க. உங்களுக்கு கோபம் வரலையா? என ராதிகா கேட்க, இது என்ன புதுசா எனக்கெல்லாம் பழகிட்டு. நம்ம அத்தை தானே என பாக்கியா  ஈசியா சொல்ல, அதற்கு ராதிகா நம்ம அத்தையா? என கேட்க, பாக்யா எனக்கு வேலை இருக்கு என்று சொல்லி சமைக்க தொடங்குகிறார்.

அதன் பின்பு சமையலை முடித்துவிட்டு ஏன் இன்னும் யாரும்  சாப்பிட வரவில்லை என்று மேலே சென்று ரூமில் பார்க்க, ஜெனி, செழியன், இனியா, எழில், அமிர்தா, நிலா பாப்பா என எல்லோரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்து ஆனந்த கண்ணீர் விடுகிறார். அதன் பின்பு செழியன் அவரை கட்டிப்பிடித்து எல்லாத்துக்கும் நீ தான்மா காரணம் என கலங்குகிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement