• Apr 02 2025

பக்கத்து வீட்டு பெண்ணை மிரட்டிய சரண்யா பொன்வண்ணன் மீது போலீஸ் புகார்! ஷாக் நியூஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது வழக்கு பதிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டிற்கு பக்கத்து வீட்டு பெண்ணுடன் கார் நிறுத்துவது தொடர்பில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த வாக்குவாதம் வாய்ச்  சண்டையாகவும் அவ்வப்போது நடப்பதாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து பக்கத்து வீட்டுப் பெண் சரண்யாவுடன் சண்டைக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

அதேபோல பதிலுக்கு சரண்யா பொன்வண்ணன் பக்கத்து வீட்டுப் பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து, அவரை சரமாரியாக திட்டியதோடு எச்சரிக்கையும் விடுத்துள்ளாராம்.


இந்த நிலையில், தற்போது குறித்த பக்கத்து வீட்டுப் பெண், நடிகை சரண்யா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

இவ்வாறு, நடிகை சரண்யாவின் கார் தமது வீட்டின் கதவு மீது உரசியதை தொடர்ந்து அவர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து திட்டியதோடு, தனக்கு மிரட்டல் விடுத்ததாகவும் அந்த பெண்ணின்  புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தகவல் தற்போது தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement