• Oct 18 2024

உங்கள நம்பித் தானே வந்தம்.. ரெஸ்பெக்ட்- ஆ அனுப்பி வைங்க ப்ளீஸ்..! ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் கெஞ்சிய இந்திய நடிகை

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

யாழ்ப்பாணம் முற்றவெளி திறந்த அரங்கில் தென்னிந்திய பின்னணி பாடகர் ஹரிஹரன் அவர்களது இசை நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

இதில் ரம்பா, யோகி பாபு, பாலா,சாண்டி மாஸ்டர், புகழ், தமன்னா,  சஞ்சீவ், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்யதர்ஷினி, ஆலியா மானசா, நந்தினி, மகாலட்சுமி, கலா மாஸ்டர் உள்ளிட்ட தென்னிந்திய நட்சத்திரங்கள் பலர் பங்கு பற்றி இருந்தார்கள்.

இந்த நிகழ்ச்சியானது தென்னிந்திய நடிகை ரம்பாவின் கணவரான இந்திரன் அவர்களது Northern Uniயினால் ஏற்பாடு செய்யப்பட்டது. 


இந்த நிகழ்ச்சி ஆனது கடந்த டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில், அசாதாரண காலநிலை மாற்றம் காரணமாக பிப்ரவரி ஒன்பதாம் தேதிக்கு பிற்போடப்பட்டது. 

இதில் பங்கு பற்ற இலவச டிக்கெட் என ஆரம்பத்தில்  அறிவிக்கப்பட்ட  போதிலும், பின்னர் 25000, 7000, 3000 ரூபாய் மற்றும் பின்னால் நின்று பார்ப்பவர்களுக்கு இலவசம் என்று  அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் வெறுப்பினையும் ஏற்படுத்தியது. 

அத்துடன் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்களுடன் புகைப்படம் எடுப்பதற்கு 30,000ஆயிரம் ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டது. இது யாழ்ப்பாணத்தில் மிகவும் பரபரப்பான தன்மையை ஏற்படுத்தியது. 


இசை நிகழ்ச்சி ஆரம்பமாகி குறுகிய நேரத்திலேயே அங்கு குழப்பநிலை உருவானது. அங்குள்ள இருக்கைகள், திரை போன்றவற்றில் சரியான முகாமைத்துவம்  இன்மையால் பலர் பணத்தை செலவழித்து நுழைவுச்சீட்டை பெற்ற போதும்  நிகழ்ச்சியை நிறைவாகப் பார்க்க முடியாத அவலம் ஏற்பட்டது.

இதை தொடர்ந்து நேற்றைய தினம் குறித்த இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், அதிகளவில் குழுமிய ரசிகர்கள் அங்கிருந்த தடைகளை உடைத்து, போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டுள்ளனர். அது நிகழ்ச்சிக்கு தடையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அங்கிருந்த ரசிகர்களிடம் பேசிய ரம்பா, அவர்களிடம் ஹெல்ப் பண்ணுமாறு கேட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், 

உங்க எல்லாரையும் எங்களுக்கு அவ்வளவு பிடிக்கும்.. நீங்க தானே சண்டை போட்டு எங்களை இங்க வர வச்சீங்க.. உங்களுக்கு நல்ல ஷோ வேண்டுமா? வேண்டாமா?

அப்படி வேணும்னா நீங்கதான் எங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்.. நீங்க நினைச்சா தான் முடியும்.. நாங்க இங்க போலீசயோ, இந்த நாட்டையோ நம்பி வரல.. உங்களைத்தான் நம்பி வந்தோம்.. கொஞ்சம் பொறுமையா இருங்க..


பெரிய பெரிய ஆஃபீசர் எல்லாம் சப்போர்ட் பண்றாங்க.. ஆனா நீங்க ஏன் இப்படி பண்றீங்க? ப்ளீஸ் இங்க உங்கள நம்பி வந்து இருக்கிறவங்க எல்லாம் பயப்படுறாங்க.. அவர்களை பயமுறுத்தி அனுப்பலாமா?

இங்க வந்து இருக்கிறவர்களை எப்படி ரெஸ்பெக்ட்டா அனுப்பனும் என்று உங்களுக்கு தெரியும் தானே.. அப்படி அவங்கள ரெஸ்பெக்ட்டா அனுப்புவீங்க தானே? இந்த ஷோவ நல்ல முறையில் நடத்த தானே உங்களுக்காக ஹரிஹரன் சார் வந்து இருக்கார்.. எனவே பொறுமையா இருந்து இந்த நிகழ்ச்சியை பாருங்க என கூறியுள்ளார்.



Advertisement