• Jan 19 2025

அஞ்சாதே திரைப்பட நடிகர் மூச்சுத் திணறலால் திடீர் மரணம்! பேரதிர்ச்சியில் உறைந்த தமிழ் சினிமா

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்தே, பிரபல நட்சத்திரங்களாக ஜொலித்த சிலரின் அடுத்தடுத்த உயிரிழப்புகளை தமிழ் சினிமா சந்திக்க நேர்ந்துள்ளது.

அதில் முக்கியமாக இளையராஜாவின் மகளான பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழ்த் திரை உலகை பெரிதும் உலுக்கி  இருந்தது.

இந்த நிலையில், அஞ்சாதே படத்தில் துணை நடிகராக நடித்த ஸ்ரீதர், மூச்சுத் திணறல் ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்த சம்பவம், பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் அஞ்சாதே.

இதில் நடிகர் நரேன் நாயகனாகவும், பிரஷாந்த் வில்லனாகவும் நடித்திருந்த அஞ்சான் படம் பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது.


அத்துடன், இயக்குநர் மிஷ்கினின் கேரியரில் திருப்புமுனை ஏற்படுத்தியதும் இந்தப் படம் தான்.

அஞ்சாதே படத்தில் கால் ஊனமுற்றவராக நடித்தவர் தான் ஸ்ரீதர். அதில் அவருக்கு சின்ன கதாபாத்திரம் என்றாலும் அவரது கேரக்டருக்கு பாராட்டுக்கள் அமோகமாக கிடைத்தது.

தன் கண்முன்னே மகனே போலீசார் சுட்டுக் கொள்ளும் போது அவரது நடிப்பு அனைவரையும் அசர வைத்தது, பாராட்டுக்களும் கிடைத்தது. இதை தவிர முதல்வன் படத்திலும் நடித்திருந்தார்.

இவ்வாறான நிலையில், தற்போது அவர் உயிரிழந்த சம்பவம் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.








Advertisement

Advertisement