• Dec 03 2024

'லால் சலாம்' படத்தில் யாருக்கு அதிக சம்பளம்? சூப்பர் ஸ்டாரை விட அதிக தொகை வாங்கிய ஐஸ்வர்யா?

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் தான் ’லால் சலாம்’. 

இந்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகிய நடிகர்கள்  முக்கிய கேரக்டரில் நடித்து உள்ளார்கள். இந்த படம் நேற்று 9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது.

லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, லைகா நிறுவனம் தயாரித்திருந்தது.


இந்த நிலையில், லால் சலாம் படம் ரிலீஸ் ஆன நிலையில் ஊடகத்துக்கு பேட்டி வழங்கிய இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திடம்,  இந்த படத்தில் உங்களுக்குத் தான் அதிக சம்பளமா? என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த ஐஸ்வர்யா அதிக சம்பளம் என்பதில் எதை கற்றுக் கொள்கிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கு.. அப்படி பார்க்கும்போது லால் சலாம் படத்தின் மூலம் அதிகமாக கற்றுக் கொண்டது நான் தான்... ஆனால் சம்பளத்தில் அதிகம் பெற்றது சூப்பர் ஸ்டார் தான் என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement