மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. அதேபோல அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்த ஆண்டு மே தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது.
விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்து வருகின்றார்கள் படக் குழுவினர். அதன்படி சமீபத்தில் திரிஷாவும் அஜித்தும் எடுத்துக்கொண்ட அட்டகாசமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில், விடாமுயற்சி படக் குழுவினரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் அஜித் குமாரும் த்ரிஷாவும் சிம்பிளாக காணப்படுகிறார்கள். இந்த புகைப்படம் இணையத்தை கவர்ந்துள்ளது. இதுவே இந்த ஆண்டின் இறுதி புகைப்படமாகவும் காணப்படும்.
அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படம் பிரேக் டவுன் என்ற படத்தின் ரீமேக் தான் என்று ஆரம்பத்தில் இருந்தே தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் இதனை பட குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.
எனினும் விடாமுயற்சி படத்தின் கதை இணையதளத்திலேயே வெளியாகி உள்ளது. அதில் காணாமல் போன தனது மனைவியை கண்டுபிடிக்கும் ஹீரோ, இந்த தேடலின் போது வில்லனிடம் சிக்கி பல இடையூறுகளை சந்திக்கின்றார். இதுதான் இந்த படத்தின் கதைக்களமாக காணப்படுகின்றது.
Listen News!