• Jan 19 2025

தந்தைக்கு போட்டியாக வரும் யுவனின் பயோபிக்.. இயக்குனர் இவரா? இளையராஜாவுக்கு ஆப்பு

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இசைத்துறையில் தனக்கென மாபெரும் கோட்டையை கட்டி வைத்திருப்பவர் தான் இசைஞானி இளையராஜா. அவருடைய மகன் யுவன் சங்கர் ராஜாவும் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

விஜய், அஜித், ரஜினி என பிரபல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்திருக்கும் யுவன் சங்கர் ராஜா, வெளிநாடுகளில் பல கச்சேரிகளையும் நடத்தி வருகின்றார்.

தன்னுடைய 16 வயதில் அரவிந்தன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் யுவன் சங்கர் ராஜா. இவர் கிட்டத்தட்ட 25 வருடங்களில் 170 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

துள்ளுவதோ இளமை என்ற படம் தான் இவருடைய வாழ்க்கையில்  ஒரு திருப்புமுனையாக இருந்தது. இந்த படத்தில் அமைந்த அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது. அதற்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார் யுவன்.


இந்த நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பயோபிக் கூடிய சீக்கிரமே உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இவரது தந்தையான இளையராஜாவின் பயோபிக் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க, அதில் தனுஷ் நடிக்கின்றார் என்ற தகவல் வெளியானது. அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை அதிகரித்து இருந்தது.

தற்போது யுவன் சங்கர் ராஜாவின் வாழ்க்கையை படமாக எடுக்கும் பட்சத்தில் அதை நான் தான் இயக்குவேன் என இயக்குனர் இளன் கூறி இருந்தார்.

இளையராஜாவை பொருத்தவரை பெயரும் புகழும் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற மனநிலையும் கர்வமும் அவரிடம் காணப்படுகின்றது. 

தற்போது தன்னுடைய பயோபிக் படமும் தன் மகனின் பயோபிக் படமும் ஒன்றாக வரும் நிலையில், அதையும் அவர் விரும்ப மாட்டார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement