• Jan 18 2025

பாக்கியலட்சுமி சீரியலில் இப்படியொரு திருப்பமா? திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியல் கிட்டத்தட்ட 3 வருடங்களை கடந்து ரசிகர்களின்  அமோக வரவேற்புடன்  ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியலில் ராமமூர்த்தியின் கேரக்டர் முடிவுக்கு வந்ததை தொடர்ந்துசரிவை சந்தித்தது. ஆனாலும் தற்போது விட்ட இடத்தை பிடித்துள்ளது பாக்கியலட்சுமி சீரியல்.

பாக்கியலட்சுமி சீரியலில் ரெஸ்டாரண்டில் பிரியாணி ஆர்டரில் கலவரம் பண்ணியது கோபி தான் என பாக்கியாவுக்கு தெரிய வர, அதன் பின்பு பாக்கியா கோபி மீது போலீஸ் கம்பளைண்ட் கொடுக்கின்றார். இதனால் கோபியை போலீசார் தூக்கிச் செல்கின்றார்கள்.

இதை தொடர்ந்து ஒருவாறு வெளியில் வந்த கோபி நேரே பாக்யா வீட்டுக்கு சென்று பிரச்சனை பண்ணுகிறார். அந்த வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரலாகுது. பாக்யா பக்கம் இருக்கும் நியாயத்தை இனியாவும் செழியனும் புரிந்து கொள்ளவே இல்லை. அதேபோல ஈஸ்வரியும் மீண்டும் தனது மகனின் பக்கம் சாய்ந்துள்ளார்.


இந்த நிலையில், பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கோபியுடன் ஈஸ்வரி, இனியா, செழியன் ஆகியோர் ஒன்றாக இருக்கும் போட்டோ வைரலாகி உள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள் அப்படி என்றால் மீண்டும் பாக்யாவுக்கு ஆப்பு வைக்க நாலு பேரும் ஒன்றாக சேர்ந்துட்டாங்களா.? இவங்க திருந்தாத ஜென்மங்கள் சீக்கிரம் இந்த சீரியலை முடித்து விடுங்கள் என்று கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.

Advertisement

Advertisement