• Jan 19 2025

பிக்பாஸ் சீசன் 7 இன் டைட்டில் வின்னர் இவர் தானா?- இந்த ஒரு ஸ்ராட்டஜியை தான் மறைச்சு வைச்சிருக்கிறாங்களா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது பல்வேறு சர்ச்சைகள், பல சண்டைகள் என்பவற்றைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கின்றது. எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் கொடுக்கப்படும் டாஸ்குகளும் வித்தியாசமானவையாகவே இருக்கின்றன.

அதிலும் இதற்கு முன்பு நடந்த எல்லா சீசன்களிலும் ஒரு குறிப்பிட்ட நாளுக்குள் இவர்தான் டைட்டில் வின்னர் என்று மக்களால் கணிக்க முடிந்தது. ஆனால் இந்த சீசனில் மட்டும்தான் 80 நாட்களை கடந்தும் யார் டைட்டில் வின்னர் என்று பார்வையாளர்களால் கணிக்க முடியவில்லை.ஒரு வாரம் நன்றாக விளையாடி மக்களின் சமூக ஆதரவை பெறுபவர்கள் அடுத்த வாரம் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார்கள். 


விசித்ரா, அர்ச்சனா, தினேஷ் இவர்கள் மூவருக்குள்ளும் தான் கடுமையான போட்டி இருக்கும் என்று சொன்னாலும்,இவர்களும் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதுண்டு இதனால் யார் டைட்டில் வின்னர் ஆவார் என்பது பெரிய கேள்விக் குறியாகவே உள்ளது.

இருந்தாலும் இதுவரை நடந்த பிக் பாஸ் சீசன்களில் வெற்றி பெற்ற போட்டியாளர்களின் பெயரை வைத்து, இந்த சீசனில் யார் டைட்டில் வின் பண்ணுவார்கள் என்ற கணிப்பு வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் சீசன் ஒன் நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரவ், இவருடைய பெயரின் முதல் எழுத்து ஆங்கிலத்தில் A-ல் ஆரம்பிக்கிறது. 

அடுத்து இரண்டாவது சீசன் போட்டியாளர்களில் வெற்றி பெற்றது ரித்விகா. இவருடைய பெயரில் முதல் எழுத்து R என்னும் எழுத்தில் ஆரம்பிக்கிறது. அவரைத் தொடர்ந்து மூன்றாவது சீசனில் வின்னர் முகேன், இவருடைய பெயரின் முதல் எழுத்து M ஆகும்.


நான்காவது சீசனில் மக்களின் சமூக ஆதரவை பெற்று வெற்றி பெற்றவர் ஆரி அர்ஜுனன். இவருடைய முதல் எழுத்து A ஆகும். அவரை தொடர்ந்து ஐந்தாவது சீசனில் மக்களின் நாயகன் ராஜு டைட்டிலை வென்றார். அவர் பெயரின் முதல் எழுத்து R ஆகும். இவர்களை தொடர்ந்து ஆறாவது சீசனில் வெற்றி பெற்றவர் அசிம். அவருடைய பெயரின் முதல் எழுத்தை பார்த்தால் A வில் தொடங்குகிறது.

இதை வைத்துப் பார்த்தால் இதுவரை நடந்த பிக் பாஸ் சீசன்களில் A R M A R M என்னும் எழுத்துக்களின் வரிசையில் தான் போட்டியாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதனால் இந்த சீசனில் ஏ என்னும் எழுத்தில் பெயர் தொடங்குபவர் தான் டைட்டில் வின்னர் ஆவார். அப்படிப் பார்த்தால் அர்ச்சனா தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என இப்போது ஒரு தகவல் பரவி வருகிறது.

Advertisement

Advertisement