• Apr 27 2026

அதெல்லாம் பண்ண வேணாம், நான் சொல்லுறதை செய்- சிவகார்த்திகேயனுக்கு ஆடர் போட்ட அவரது அம்மா- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே உச்சம் தொட்ட நடிகராக வளர்ந்து நிற்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் நுாறு கோடிக்கும் அதிகமாக வசூலை் பெறுவதால் இவர் நடித்து வரும் திரைப்படங்களின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பானது அதிகமாகக் காணப்படுகின்றது.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய மாவீரன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்தது. இதனை அடுத்து அவரது நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படம் வெளியாகவுள்ளது.இப்படத்தை எதிர்பார்த்து தான் ஒட்டுமொத்த சிவகார்த்திகேயன் ரசிகர்களும் காத்துகொண்டு இருக்கிறார்கள். 


சினிமாவில் பிஸியாக இருக்கும் இவர் தன்னுடைய மாமன் மகளான  ஆர்த்தி என்பவரை கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.இந்த ஜோடிக்கு ஆராதனா, குகன் தாஸ் என இரு பிள்ளைகள் உள்ளனர்.இந்நிலையில் திருமணம் ஆன நேரத்தில் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் கொடுத்த பேட்டியின் வீடியோ க்ளிப்பிங் தற்போது வைரலாகி வருகிறது.


இந்த வீடியோவில் 'நமக்கு இப்போது தான் 21, 22 வயது ஆகிறது அப்படியே காதலிச்சு கல்யாணம் பண்ணலாம்னு இருந்தேன். ஆனா அதெல்லாம் நீ ஒன்னும் பண்ணி கிழிக்க வேண்டாம், உன்னுடைய மாமன் பொண்ணையே திருமணம் பண்ணிக்கோ-னு சொல்லிட்டாங்க' எங்க அம்மா சொல்லிட்டாங்க என நகைச்சுவையாக கூறியிருப்பார்.



Advertisement

Advertisement