• Jan 19 2025

வானத்தில் பறக்கும் இந்தியன் தாத்தா ! வேற லெவெலில் செய்யப்பட்ட விளம்பரம் !

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

உலக அளவில் சினிமா திரைப்படம் வெளியாகுவதற்கு முன்பு அதனை விளம்பர படுத்துவதை  வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறே சமீபத்தில் வெளியாக  இருக்கும் பாண் இந்திய படமான இந்தியன் 2 திரைப்படத்தின் ப்ரோமோஷனை வித்தியாசமாக செய்துள்ளனர்.


இந்தியன் 2 என்பது வெளியாக காத்திருக்கும்  பாண் இந்திய  திரைப்படம் ஆகும். இயக்குநர் ஷங்கரின் இயக்கதில் வரும் இந்த படத்தில் கமல் ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதுடன் காஜல்அகர்வால் , சித்தார்த் ஆகியோரும் நடித்துள்ளனர். 


இந்த நிலையிலேயே குறித்த திரைப்படத்தின் ப்ரோமோஷனில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறே சமீபத்தில் வித்தியாசமான முறையில் டுபாய் நாட்டில் பாராசூட் மூலம் இந்தியன் 2 படத்தின் போஸ்டரை வைத்துக்கொண்டு பறந்து திரிந்து விளம்பரம் செய்துள்ளனர். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 


Advertisement

Advertisement