• Jul 22 2026

இரண்டு ஸ்கிரிப்ட் இருக்கு .. சீக்கிரமே டைரக்ஷன் பண்ணுவேன்! சிங்கம்புலி கொடுத்த அதகள அப்டேட்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது பேசு பொருளாக காணப்படும் நடிகருள் ஒருவராக காணப்படுபவர் தான் நடிகர் சிங்கம் புலி. இவர் இறுதியாக மகாராஜா என்ற படத்தில் நடித்திருந்தார்.

நடிகர் சிங்கம்புலி பெரும்பாலும் காமெடி நடிகராக தான் நடித்து வருவார். இவர் நடிகராக மட்டுமில்ல சிறந்த இயக்குனராகவும் காணப்படுகின்றார்.

அதன்படி அஜித் நடிப்பில் வெளியான ரெட் திரைப்படம், சூர்யா நடிப்பில் வெளியான மாயாவி திரைப்படம் ஆகியவற்றை இவர்தான் இயக்கியிருந்தார்.


மேலும், பிதாமகன், நான் கடவுள் ஆகிய படங்களில் இணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இப்படி அநேகமான திரைப்படங்களை இயக்கி நடித்துள்ளார் சிங்கம் புலி.

இந்த நிலையில், தற்போது தன்னிடம் இரண்டு ஸ்கிரிப்ட்  இருப்பதாக தெரிவித்த சிங்கம் புலி, அதுல ஒன்னு குழந்தைகளுக்கான 3D படம் என்றும், அதனை ஒரு பெரிய நிறுவனத்தை அணுகி கொடுத்துள்ளதாகவும்,  இந்த படத்தினை பற்றிய  அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் தற்போது தகவல் தெரிவித்து உள்ளார்.

Advertisement

Advertisement