• Jan 19 2025

அதிரடியாக அரெஸ்ட் ஆகும் ஈஸ்வரி.. நடுத்தெருவில் அசிங்கப்பட்ட கோபி! பரபரப்பான திருப்பம்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகும் சீரியலில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி சீரியல்.

இந்த சீரியலில் குடும்பப் பெண்ணாக காணப்படும் பாக்கியா, தனது கணவர் விவாகரத்து பெற்று இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்து வரும் நிலையிலும், கணவரின் அப்பா, அம்மா உட்பட தனது குடும்பத்தை பொறுப்புள்ள தலைவியாக கவனித்து வருகின்றார்.

இதற்கிடையில் ஏற்படும் குடும்ப பிரச்சனைகள், பிள்ளைகளின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள், தொழில் ரீதியில் ஏற்படும் பிரச்சனைகள் என அனைத்தையும் சமாளித்து முன்னோக்கிச் செல்லும் ஒரு தைரியமிக்க பெண்ணாக காணப்படுகின்றார்.

இதன் காரணத்தினாலேயே இந்த சீரியலை பார்ப்பதற்கு அதிகளவான இல்லத்தரிசிகள் ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.  இந்த சீரியலில் சிங்கம் போல காணப்பட்ட கோபி, ராதிகாவை திருமணம் செய்த பின்பு மிகவும் அசிங்கப்பட்டு கேலிக்குரிய ஒரு நபராக காணப்படுகிறார். அவரை ரசிகர்கள் வெகுவாக வெறுத்து வருகின்றார்கள்.


இந்த நிலையில், தற்போது வெளியான ப்ரோமோவில், கமலா கொடுத்த கம்பளைண்ட்டால் போலீஸார் ஈஸ்வரியை அரெஸ்ட் பண்ணி செல்கின்றார்கள். . இதன்போது பாக்கியா அவங்க தப்பு பண்ணியிருக்க மாட்டாங்க.. விடுங்க எனக் கெஞ்சிய போதும், எதையும் கேட்காமல் ஈஸ்வரியை போலீஸ் வண்டியில் அழைத்துச் செல்கின்றார்கள்.

இதை பார்த்த கோபி என்ன நடந்தது என்று வந்து விசாரிக்க, கோபியின் அப்பா ராமமூர்த்தி அவரை கண்டபடி அடித்து, எப்படி இருந்தவள் இப்படி ஆக்கிட்டியே என அடித்து திட்டுகிறார். 

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் கோபி தலை மேல் கையை வைத்து நடுத்தெருவில் நிற்கிறார். மறுபக்கம் ஈஸ்வரியை போலீசார் அழைத்துச் செல்கின்றார்கள். இது தான் தற்போது வெளியான ப்ரோமோ.

இதனை பார்த்த ரசிகர்கள், எல்லாருக்கும் ஒரு கேடு வருது.. ஆனா இந்த பூமர் அங்கிள் கோபிக்கு ஒரு கேடு வருதில்லையே.. இந்த சீரியலுக்கு ஒரு என்ட் போட்டு விடுங்க என கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement