• Jan 19 2025

’இந்தியன் 2’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் மனைவி சங்கீதா.. எதிர்பாராத சர்ப்ரைஸ்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற இருக்கும் நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ள பல சிறப்பு விருந்தினர்கள் வருகை தந்து இருக்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

குறிப்பாக ராம்சரண் தேஜா, சிம்பு, சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ், காஜல் அகர்வால், உள்ளிட்ட பலரும் கமல்ஹாசன், ஷங்கர் உள்பட படத்தின் குழுவினரும் கலந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத சர்ப்ரைஸாக விஜய் மனைவி சங்கீதா இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார். விஜய் - சங்கீதாவின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும்  படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரிப்பதால் அவர் மரியாதை நிமித்தமாக இந்த விழாவுக்கு வந்துள்ளார் என கூறப்படுகிறது.ஆனால் அதே நேரத்தில் விஜய் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் ’இந்தியன் 2’ திரைப்படம் வெளியாக உள்ளதை அடுத்து மூன்று மொழிகளிலும் உள்ள பிரபலங்கள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் குவிந்துள்ளனர் என்பதும் தற்போது விழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் இந்த விழா பிரமாண்டமாக நடந்து வரும் நிலையில் இந்த விழாவின் நிகழ்ச்சி விரைவில் முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement