• Jan 19 2025

ஒரு பாட்டு கூட தேறலையே.. அனிருத்தா இப்படி? ‘இந்தியன் 2’ பாடல்கள் குறித்து ரசிகர்கள் அதிருப்தி..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!


உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள ’இந்தியன் 2’ திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

ஆனால் சில மணி நேரங்களுக்கு முன்பு அனிருத் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் ஆறு பாடல்களையும் வெளியிட்ட நிலையில் இந்த பாடல்களை கேட்ட ரசிகர்கள் அனிருத்தா இப்படி? பாடல்கள் ஒன்று கூட தேறவில்லையே என தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ’இந்தியன்’ படத்திற்காக ஏஆர் ரகுமான் போட்ட அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்போது காலத்துக்கு ஏற்றபடி வேகமாக அனிருத் கம்போஸ் செய்திருந்தாலும் இதில் ஒரு பாடல் கூட தேறவில்லை என்றுதான் இசை ரசிகர்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் பாடல்களை படமாக்குவதில் ஷங்கர் கைதேர்ந்தவர் என்பதால் படம் ரிலீஸ் ஆன பின்னர் இந்த பாடல்களை ஹிட்டாக்கி விடுவார் என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். மொத்தத்தில் அனிருத் பாடல் என்றால் முதல் முறை கேட்கும் போதே அசத்தலாக இருக்கும் என்ற விமர்சனம் இந்த படத்தின் ஒரு பாடலுக்கு கூட வரவில்லை என்பது பெரும் சோகமே.


Advertisement

Advertisement