• Jan 20 2025

உலக நாயகன் இல்லையென்றால் ஸ்பான்சரும் இல்லை.. பிக்பாஸ்சுக்கு வந்த புது சிக்கல்..!

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஏழு சீசன்களாக உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. எனினும் ஒரு சில சமயங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும் எபிசோடுகளை விட கமலஹாசன் தொகுத்து வழங்கும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் டிஆர்பியும் எகிறும். கமல் என்ன தீர்ப்பு வழங்கப் போறார்? யாரை தட்டிக் கேட்கப் போகின்றார்? யாருக்கு குறும்படம் காட்டப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மட்டுமின்றி போட்டியாளர்களிடமும் காணப்படும்.

இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகியதால் அந்த நிகழ்ச்சியை வழங்கும் நிறுவனம் பெரும் சிக்கலில் உள்ளது என கூறப்படுகின்றது.

அதாவது பிக் பாஸ் வனஜே நிறுவனம் வழங்கிட்டு வருகின்றதாம். அதில் கமலஹாசன் விலகக் கூடாதுன்னு நிறைய தடவை சொல்லிப் பார்த்துள்ளார்கள். இப்போது கமல் அந்த நிகழ்ச்சியை விட்டு விலகினால் விளம்பர நிறுவனங்கள் பின்வாங்குவதாக சொல்லப்படுகிறது.

உலகநாயகன் கமல் இல்லை என்றால் இந்த நிகழ்ச்சியில் நாங்களும் ஸ்பான்சர் வழங்க முடியாது. அவருக்கு இணையாக வேறு யாரையாவது தேர்ந்தெடுத்தால் நாங்கள் ஸ்பான்சர் பண்ணுறதுக்கு யோசிப்போம் என்று கூறியுள்ளனர்.


மேலும் தங்களுக்கு சில தேர்வில் இருப்பதாகவும் அவர்களை கொண்டு வந்தால் ஸ்பான்சர் பண்ணுவோம் எனவும் அதன்படி விஜய் சேதுபதி, சிம்பு ஆகிய இருவரையும் தான் ஸ்பான்சர் கம்பெனிகள் குறிப்பிடுகின்றதாம்.

இவர்களில் யாராவது ஒருவர் பிக் பாஸ் நடத்தினால் தாங்கள் ஸ்பான்சர் பண்ணுகிறோம் என் கசிந்துள்ளது. இதில் விஜய் சேதுபதி உண்டான பேச்சுவார்த்தை 90 சதவீதம் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.

அதைப்போல இன்னொரு தரப்பு சிம்வுடனும் பேச்சுவார்த்தை நடக்கின்றது. அது சிம்பு என்ன  மனநிலையில் இருக்கின்றார் என தெரியவில்லை என்றும் உலக நாயகன் கமலும் சிம்புவை தான் சிபாரிசு பண்ணியதாகவும் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement