• Sep 14 2024

மொத்தமாக நிறுத்தப்பட்ட தங்கலான் பட பிரமோஷன்! பின்னணியில் இப்படியொரு காரணம்?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் சியான் விக்ரம் - பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தான் தங்கலான். இந்த திரைப்படம் ஆங்கிலேயர் காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

தங்கலான் திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு  காணப்படுவதோடு இந்த திரைப்படம் எதிர்வரும் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு இந்த படத்தை வெற்றி பெற செய்வதற்கான ப்ரொமோஷன் பணிகளில் தீவிரமாக பட குழுவினர் ஈடுபட்டுள்ளார்கள்.

தங்கலான் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஐந்தாம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதன் பின்பு பல பகுதிகளுக்குச் சென்று படத்திற்கு பிரமோஷன் செய்யும் பணியிலும் படக்குழு ஈடுபட்டது.


அந்த வகையில் கேரளா மாநிலத்தில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தது. ஆனால் அந்த ப்ரோமோஷன் பணிகளை திடீரென படக்குழு ரத்து செய்தது.

அதற்கு காரணம் இந்த நிகழ்ச்சிக்கு செலவாகும் தொகையை நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்பெறும் வகையில் நிவாரண நிதி வழங்குவதற்காக முடிவு செய்துள்ளது.

அதன்படி தங்கலான் பட புரமோஷன் பணிக்காக ஒழிக்கப்பட்டு இருந்த 5 லட்சம் ரூபாயை பட குழுவினர் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கி அசத்தியுள்ளார்கள்.

Advertisement

Advertisement