• Jul 07 2025

தாலி நான் தானே கட்டணும்..இந்த ஆண்டு கடைசில கல்யாணம்..நடிகர் அதர்வா பேச்சு..

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் முரளியின் மகன் அதர்வா இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து "பராசக்தி " படத்தில் நடித்து வருகின்றார். இதைவிட "இதயம் முரளி " எனும் படத்திலும் நடிப்பதற்காக கமிட்டாகியுள்ளார். இவரது மார்க்கெட் சற்று குறைந்து இருந்தாலும் சினிமா வாரிசு எனும் பெயரில் இவருக்கு பெரிய மரியாதை உள்ளது.


இந்த நிலையில் சமீபத்தைய நேர்காணல் ஒன்றில் இவரது திருமணம் குறித்து கேட்ட கேள்விக்கு " அம்மா எல்லாம் என்னை கஷ்டப்படுத்த மாட்டாங்க ஆனால் தம்பிக்கு கல்யாணம் முடிஞ்சிட்டு so வீட்டுக்கு வார விருந்தாளிங்க அடுத்து உனக்கு தான் கல்யாணம் என்ன மாதிரின்னு கேட்டா அம்மா ஓம் இந்த வருஷம் கடைசில கண்டிப்பா நடக்கும் என சொல்லுவாங்க நானும் ரெண்டு சைடும் பார்த்து மண்டை ஆட்டிடு இருப்பேன் அவங்க சொல்லுவாங்க தாலி நான் தானே கட்டணும்" என வேடிக்கையாக பேசியுள்ளார்.

Advertisement

Advertisement