• Jul 07 2025

thugh life படத்தின் " முத்தமழை " பாடலின் வீடியோ வெளியீடு..!

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

மணிரத்னம் இயக்கத்தில் கமல்,சிம்பு ,திரிஷா ,அசோக் செல்வன் மற்றும் பலர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள "thugh life " திரைப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தில் மொத்தமாக 9 பாடல் இருக்கும் என மணிரத்னம் அறிவித்து இருந்தார்.


இதைவிட படத்தின் இசையமைப்பு விழாவில் படத்திற்காக தீ பாடிய பாடலை நிகழ்ச்சியில் பாடகி சின்மயி பாடி ரசிகர்களால் வரவேற்கப்பட்டார். மேலும் இந்த பாடலை படத்தில் வைக்குமாறு இயக்குநரிற்கு பல ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து இருந்தனர். ஆனால் "முத்த மழை " பாடலே படத்தில் இல்லாமல் போய் ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்தித்தனர்.


இந்த நிலையில் தற்போது "முத்தமழை " பாடலின் வீடியோ பாடலினை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடல் வெளியாகி ஒரு சில மணிநேரத்திற்குள் அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளதுடன் வைரலாகி வருகின்றது. திரிஷா பாடுவது போன்று இந்த வீடியோ அமைந்துள்ளது. வீடியோ பாடல் இதோ..

Advertisement

Advertisement