• Dec 29 2025

லாரி கிளீனரா இருந்தேன்.! அந்த நொடி கண்ணே கலங்கிவிட்டது.. வாழ்க்கையின் வலிகளை பகிர்ந்த சூரி

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நடிகர் சூரி, இன்று கதாநாயகனாக உயர்ந்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். திரையுலகில் சிரிப்பை வழங்கியவர் என்றாலும், அவரது வாழ்க்கை பயணம் எளிதானது அல்ல. அதில் போராட்டமும், வலியும், தியாகங்களும் தான் அதிகளவில் நிறைந்திருந்தது.


சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்துகொண்ட நடிகர் சூரி, தனது வாழ்க்கையில் சந்தித்த கடினமான அனுபவங்களை பகிர்ந்தபோது உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். அவர் பேசிய அந்த வார்த்தைகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்களின் மனதை நெகிழ வைத்துள்ளது.

அந்த விழாவில் பேசும்போது,“பல கஷ்டங்களுக்கு பிறகு சினிமாவில் ஒரு வழியாக வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்துக்காக எனக்கு டிரஸ் அளவு எடுக்கும்போது, கை காலெல்லாம் நடுங்கியது. கண்ணே கலங்கியது. இவ்வளவு நாளைக்கு பிறகு வாழ்க்கை மாறப் போகுதேன்னு நினைச்சேன்." என்று கூறியிருந்தார். 


ஆனால் அந்த சந்தோஷம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சூரி தொடர்ந்து, “அந்த கேரக்டருக்கு திடீர்னு இன்னொருத்தரை ரெக்கமண்ட் பண்ணிட்டாங்க. உடனே ‘சட்டையை கழட்டுங்கள்’ன்னு சொன்னாங்க. அதே இடத்துல சட்டையை கழட்டினேன்.” என்றார். 

இந்த அனுபவத்தை கூறும்போது சூரி கண்களில் கண்ணீர் வழிந்தது. அந்த ஒரு நொடி, அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவாக மாறியுள்ளது.

அத்துடன் சூரி, சினிமாவிற்கு வருவதற்கு முன்பு செய்த வேலைகளை நினைவுகூர்ந்தபோது, அவரது வாழ்க்கையின் உண்மையான போராட்டம் வெளிப்பட்டது. அதாவது, “நான் லாரி கிளீனராக இருந்தேன். சாக்கடையை அள்ளும் வண்டியில் கொஞ்ச நாள் வேலை செய்தேன். அப்புறம் பெயிண்ட் அடிக்க சென்றேன். சென்னையில் இருக்கிற பெரிய கட்டடங்களில் என் கை படாத இடமே இல்லை.” என்று கூறியிருந்தார். 


Advertisement

Advertisement