• May 15 2025

சின்ன வயசில அம்மாவ தள்ளிவிட்டேன்…இப்போ அந்த நினைவிலேயே நெகிழ்கிறேன்..!-இயக்குநர் சங்கர்.!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் சங்கர். இவர் ஜென்டில்மேன், இந்தியன் , சிவாஜி, ஐ எனப் பன்முகத்தன்மை கொண்ட கம்பீரமான படங்களை வழங்கியவர். தற்போது 'இந்தியன் 2' படத்தின் வேலைகளில் முழுமையாக ஈடபட்டுள்ள நிலையில், சமீபத்தில் அவர் ஒரு உருக்கமான பேட்டியில் கலந்து கொண்டு தனது தாய் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

பேட்டியின் போது, சங்கர் தனது சிறுவயது அனுபவங்களைச் சிரிப்புக் கலந்த நெகிழ்ச்சியோடு பகிர்ந்திருந்தார். அதில் அவர் கூறியதாவது, "எங்கம்மா சின்ன வயசில எல்லாம் மருதாணி வைச்சு விடுவாங்க. ஆனா நாங்க லேடீஸ் போடுறது எங்களுக்கு வேண்டாம் என்று அவங்களை தள்ளிவிடுவோம். ஆனாலும் ‘டேய் வச்சுக்கோடா’ என்று போர்ஸ் பண்ணி வைப்பாங்க!" எனக் குறிப்பிட்டார்.


அவரது இந்த வசனம் பலரது முகத்திலும் புன்னகையைக் கொண்டுவந்தது. மருதாணி போடுவது பெண்களுக்கு மட்டுமே என்ற எண்ணத்தில் இருந்த சிறுவயது மனதில் அம்மா எடுத்த முடிவுகள் எப்படி தன்னை மாற்றியதென்றும் அதன் பின்னால் இருந்த அம்மாவின் பாசம் என்பன குறித்தும் சிறப்பாகப் பேசியிருந்தார்.

இந்த உரையாடலின் தொடர்ச்சியாக, இயக்குநர் சங்கர் தனது தாயின் மனப்பான்மையைப் பற்றியும் பேசினார். அதன்போது அவர், "எங்க அம்மாவுக்கு பொம்பிள பிள்ளைகள், ஆம்பிள பிள்ளைகள் என்ற வேறுபாடே இல்ல. எல்லாரோடையும் சமமாத் தான் பழகுவாங்க." என்றும் கூறியிருந்தார்.

Advertisement

Advertisement