• Dec 06 2024

எனக்கு யாரும் இல்லை! சோசியல் மீடியா தான் என் வாழ்க்கையை சீரழிச்சிட்டாங்க! அன்ஷிதா கதறல்!

subiththira / 4 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கிய நேரத்தில் 18 போட்டியாளர்கள் இருந்தார்கள். 3 பேர் வெளியேறிய நிலையில் இன்னும் 6 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். இவர்களின் வருகையால் ஆட்டம் சூடுபிடித்துள்ளது. 


இந்நிலையில் இந்த சீசனில் செல்லமா சீரியல் நடிகை அன்ஷித்தா போட்டியாளராக பங்குபற்றியுள்ளார். இவருடன் இணைந்து பணியாற்றிய அர்னவ் அவர்களும் பிக் பாஸ் சென்றிருந்தார். மக்கள் எதிர் பார்த்த அளவு அவர் அங்கு விளையாட வில்லை அதனால் இரண்டாம் வாரம் வெளியேறினார். 


இதில் அன்ஷித்தா தனது வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத நிகழ்வினை கூறுகிறார். தான் சிறுவயதாக இருக்கும் போதே அம்மா அப்பா பிரிந்து விட்டார்கள். நான் ஒரு காப்பகத்தில் தான் வளர்ந்தேன். அந்த சிறு வயதில் செல்லம் தங்கம் என்றுதான் கேக்கணும் நான் கேட்டு வளர்ந்தது எல்லாம் கேட்ட வார்த்தைகள் தான்.

d_i_a 


எனக்கு யாரும் உதவி செய்யவில்லை நானே கஷ்ட்டப்பட்டுதான் முன்னேறி வந்தேன். என்னோட வாழ்க்கையை முழுசாக உடைத்த விடையம் இதுதான். என்ன நடந்ததுன்னு தெரியாம சோசியல் மீடியா அவங்களே என் வாழ்ககையை எழுத ஆரம்பிச்சிட்டாங்க என்று அழுதுகொண்டே கூறுகிறார். இதனை கேட்ட போட்டியாளர்கள் கவலையுடன் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.  


Advertisement

Advertisement