• Dec 17 2025

சின்னத்திரை பட்டாளமே தவெகவில் சேரப்போகுது.. அடேங்கப்பா.! ஜீவா வெளியிட்ட அதிரடி கருத்து

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

சின்னத்திரை உலகில் பல பங்களிப்புகளை வழங்கிய நடிகர்களில் ஒருவரான ஜீவா ரவி, சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் செய்தியாளர்களை சந்தித்து முக்கிய தகவலை வெளியிட்டார். இவர் கூறியதன் படி, “சின்னத்திரை நடிகர்கள் மட்டுமின்றி, டெக்னீசியன், இயக்குனர்கள் உள்ளிட்ட பெரிய பட்டாளம் விரைவில் தவெகவில்  இணைய உள்ளனர்.” என்று தெரிவித்தார்.


ஜீவா ரவி பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிட்ட தகவல், தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் குறிப்பிட்டதாவது, “அவர்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. 

தாங்களாகவே தவெக கட்சியில் இணைவதற்கு முனைந்துள்ளனர். சின்னத்திரையில் இருந்தாலும், அவர்கள் விரைவில் பெரிய பங்களிப்பை அளிக்க முனைவார்கள்” என்றார்.


சின்னத்திரை நடிகர்கள் தவெக கட்சியில் இணைவது, பொதுமக்களுக்கு வலுவான செய்தியாகும். ஏற்கனவே சின்னத்திரை உலகில் தங்களது திறமையால் அதிகளவான ரசிகர்களின் மனதைக் கவர்ந்த இவர்களின், இணைப்பு பெரிய களமாக அமையும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Advertisement

Advertisement