• Sep 29 2025

மண்டபத்தில இலை எடுத்து சம்பாதிச்சிருக்கேன்... கடந்த காலம் குறித்து புகழ் ஓபன்டாக்.!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

சமீபத்திய ஒரு நேர்காணலில் நடிகரும், காமெடியனுமான புகழ் தனது வாழ்க்கை பற்றியும், தொழிலில் அவர் அடைந்த வளர்ச்சியையும், கடந்த காலத்தில் சந்தித்த சோதனைகளையும் பகிர்ந்துள்ளார். அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சாதனையாளர்களுக்கு ஒரு உற்சாக மொழி என பரவி வருகிறது.


புகழ் தன்னுடைய இளம் வயதுக்கால நினைவுகளை பகிரும் போது, “எனக்கு மண்டபத்தில இலை எடுத்தா ஒரு கட்டுக்கு 30 ரூபா தருவாங்க. அதுதான் நம்ம முதல் சம்பளம். முடி வெட்ட கூட பணமில்லாமல் அதை வளர்த்துக் கொண்டு திரிஞ்சிருக்கேன். 


ஆனா இப்ப எல்லா சலூன் திறப்பு விழாவிற்கும் புகழ் வரலையா என்று கேட்கிறாங்க. நான் செய்த தொழிலை இன்னும் மறக்கல. நம்மை பற்றி கமெண்ட்ஸ் பண்றவங்கள பாத்துட்டு இருந்தா நாம வாழவே முடியாது." எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. 


Advertisement

Advertisement