• Oct 13 2024

மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானேன்..நகுல் அளித்த பரபரப்பு புகார்.? யார் மீது தெரியுமா?

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நகுல். இவர் சுனைனாவுடன் காதலின் விழுந்தேன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படத்தின் கதை சுமாராக இருந்த போதும் அப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்ததால் முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

இதை தொடர்ந்து சுனைனாவுடன் மாசிலாமணி படத்தில் நடித்தார். அந்தப் படமும் ஓரளவுக்கு ஓடியது. அதன் பின்பு நகுல் நடிக்கும் படங்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இதனால் பல ஆண்டுகள் பட வாய்ப்பு இல்லாமல் இருந்தார்.

இதைத்தொடர்பு கடந்த ஆகஸ்ட் மாதம் நகுல் நடிப்பில் வாஸ்கொடகாமா படம் வெளியானது. இந்த படத்தை ஆர் ஜி கிருஷ்ணர் இயக்க, வம்சி, கிருஷ்ணா, கே.எஸ் ரவிக்குமார், முனிஸ்காந்த் உட்பட பலர்  நடித்திருந்தார்கள். எனினும் இந்த படமும் எதிர்பார்க்காததற்கு எதிர்பார்த்து அளவிற்கு ஓடவில்லை.

இந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய ஏ.எம் சந்துரு  நகுல் பற்றி அளித்த பேட்டி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதாவது நான் வாஸ்கோடகாமா படத்தில் அசோசியேட் இயக்குனராக இரண்டு ஆண்டுகள் வேலை செய்தேன். ஆனால் கடைசி பத்து நாள் என்னை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கூப்பிட இல்லை. அதற்கு நகுல் தான் காரணம். 


அவர் என்னிடம் காண்டம் வாங்கி வரச் சொன்னார். ஆனால் நான் முடியாது என்று சொன்னேன். மீண்டும் காலை 03 மணி அளவில் காந்தம் வேண்டும் என்றார். அப்போதும் முடியாது என்று சொல்ல, இதை மனதில் வைத்து சந்துரு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தால் நான் வரமாட்டேன் என்று சொன்னார். இதனால் எனது 2 ஆண்டு உழைப்பு வீணாகி விட்டது என்று அவர் பேட்டி கொடுத்திருந்தார். இது இணையத்தில் பேசுபொருள் ஆனது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் நடிகர் நகுல் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி நான் வாஸ்கோடகாமா படத்தில் நடித்தேன். அப்படத்தில் பணியாற்றிய சந்துரு என்னைப் பற்றியும் இயக்குனர் ஆர் ஜே கிருஷ்ணன் பற்றியும் என்னுடன் பணியாற்றிய நடிகைகள் ஆர்த்தனா, சுனைனா பற்றியும் தவறாக யூடியூபில் பேட்டி  அளித்துள்ளார்.

இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எவ்வித ஆதாரமும் இல்லாமல் இழிவாக பேசி வரும் சந்துரு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் பேசிய காணொளியை நீக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.

Advertisement