• Jan 19 2025

இந்த வாரம் அடித்துபிடித்து திரைக்கு வரவுள்ள 8 படங்கள்.. லிஸ்ட் இதோ

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் புது புது படங்கள் வெளியாகிக் கொண்டு உள்ளன. அதன்படி கடந்த வாரம் இறுதியாக  மெய்யழகன் படத்துடன் கிட்டத்தட்ட ஆறு படங்கள் வெளியாகின. எனவே இந்த வாரம் எட்டு படங்கள் வெளியாக உள்ள நிலையில் அவை அவை என பார்ப்போம்.

சீரன்:


இந்த படத்தை இயக்குனர் எம் ராஜேஷிடம் உதவியாளராக இருந்த துரை கே முருகன் இயக்கியுள்ளார். மனிதர்களுக்கு சம உரிமை கொடுக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இனியா மூன்று வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகின்றது.

ஒரே பேச்சு ஒரே முடிவு


மலையாள இயக்குனர் வி ஆர் எழுத்தச்சன் இயக்கிய இந்த படத்தில் புரூஸ்லி ராஜேஷ் என்பவர் ஹீரோவாக நடிக்க, ஸ்ரிதா சுஜிதரன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் whatsapp குரூபால் ஏற்படும் பிரச்சனை பற்றி பேச உள்ளது. இப்படம் எதார்த்தமான கண்ணோட்டத்தில் உருவாகியுள்ளது.

சத்தியபாமா:


தெலுங்கில் கடந்த மாதம் வெளியான சத்தியபாமா படத்தின் தமிழ் டப்பிங் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் காஜல் அகர்வால் போலீஸ் அதிகாரியாக நடிக்க, அவருடன் நவீன் சந்திரா, பிரகாஷ்ராஜ், ரவிவர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

அப்பு VI Std


வசீகரன் பாலாஜி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் கல்லூரி வினோத், டார்லிங் மதன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தப் திரைப்படம் அக்டோபர் நான்காம் தேதி ரிலீசாக உள்ளது.

செல்ல குட்டி


90ஸ் கிட்ஸ் நினைவுகளை அசைபோடும் விதமாக எடுக்கப்பட்ட படம் தான் செல்ல குட்டி. இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஃபீல் குட் மூவியாக  சகாயநாதன் இயக்கியுள்ளார். புது முகங்கள் இந்த படத்தில் நடித்துள்ள நிலையில் பள்ளிக்காலம், கல்லூரி, நட்பு, காதல் என பல அம்சங்கள் இந்த படத்தில் பேசப்பட்டுள்ளதாம். இந்த படமும் அக்டோபர் நான்காம் தேதி ரிலீசாக உள்ளது.

ஆரகன்


இயக்குனர் அருண் கே ஆர் இயக்கத்தில் மைக்கல் தங்கதுரை ஹீரோவாக நடித்த திரைப்படம் தான் ஆரகன். காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் ஸ்ரீ ரஞ்சனி, கலைராணி, யாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படம் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாக உள்ளது.

வேட்டைக்காரி


காளிமுத்து காத்த முத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் வனப்பகுதியில் வாழும் மக்களின் போராட்டத்தை எடுத்துக்காட்டியுள்ளார் இயக்குனர். மேலும் இந்தக் கதையுடன் அழகான காதல் கதையும் பயணிக்க உள்ளது. இந்த படத்தில் ராகுல் கதாநாயகனாக நடிக்க சஞ்சனா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படமும் அக்டோபர் 4 ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

நீல நிற சூரியன்


திருநங்கையான சம்யுக்தா விஜயன் இந்த படத்தை இயக்கி நடித்துள்ளார். இப்படத்திற்கு நீல நிற சூரியன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படமும் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் ஒரு ஆண் பெண்ணாக மாற விரும்புவது பற்றி பேசுவது மட்டுமில்லாமல் நமது சமுதாயம் எப்படி அவர்களை பார்க்கின்றது என்று ஒரு திருநங்கையின்  பார்வையில் இருந்து எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement