• Jan 19 2025

எவ்ளோ Pain, Humiliation..? BiggBoss-ல அது இருந்திருந்தா நான்தான் TITLE WINNER! விசித்ரா பரபரப்பு பேட்டி

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

90-களில் வந்த பல்வேறு ஹிட் திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் இவர் நடித்து வந்தவர் தான் விசித்திரா.

எனினும் குறிப்பாக, வடிவேலு, கவுண்டமணி, செந்தில் ஆகியோருக்கு கோவை சரளாவுக்கு பின்பு விசித்ரா தான் சரியான ஜோடி. அந்த அளவுக்கு காமெடியில் கலக்கி வந்தவர் . 

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 7 ல் கலந்து கொண்டு மேலும் பிரபலமாகினார் . வயது கூடிய யாருமே பிக் பாஸ் வீட்டில்  நீண்ட நாட்களாக இருந்த வரலாறு இருந்ததில்லை .  

பிக் பாஸ் வரலாற்றிலையே  விசித்திரா மட்டுமே  வயது கூடுதலாக இருந்தாலும் டாஸ்க் எல்லாமே சிறப்பாக செய்து தனது கருத்துக்களை தெளிவாக முன் வைத்து இறுதி போட்டி வரை  போட்டியிட்டு வெளியேறிய பெருமை இவரை சேரும் . 


பிக் பாஸ் வீட்டை விட்டு வந்த விசித்திரா முதலாவது பேட்டியின் போது பேசியதை பார்க்கலாம் வாருங்கள்.

"எல்லோருக்குமே வணக்கம் இத்தனை நாட்களாக எனக்கு சப்போர்ட் பண்ணி வாக்களித்த எல்லோருக்கும் பெரிய நன்றிகள் .பிக் பாஸ் வீட்டை விட்டு வெளிய வந்ததும் மக்கள் கொடுத்த வரவேற்ப்பு ரொம்பவே நல்லா இருந்தது . இவ்வளவு மக்கள் ஆதரவு கிடைக்கும் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை . 

அவர்களுடைய குடும்பத்தில் ஒருத்தர் போல பார்க்கிறார்கள் . உண்மையிலேயே மகிழ்ச்சியாக உள்ளது . சின்ன குழந்தைகள்ல இருந்து பெரியவர்கள் வரை என்னுடைய ரசிகர்கள் என்று வந்து சொல்லும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது . என்னுடைய வயதில் உள்ளவர்கள் நிறைய பெயர் எனக்கு சப்போர்ட் பண்ணி இருக்கிறார்கள் . 


பிக் பாஸ் வீட்டுக்குள்ள யார் உண்மையாக இருக்கிறார்கள் பொய்யாக இருக்கிறார்கள் என்று  ஜட்ஜ் பண்ணவே முடியாது . அப்பிடி முடியும் என்றாள் நான் டைட்டில் வின் பண்ணிருப்பனே அது சொல்ல முடியாது . முக்கியமாக பிபி வீட்டில நான் கற்று கொண்டது இப்போதைய சந்ததியினருடைய கருத்துக்கள் , நடவடிக்கைகள் ரொம்பவே வித்தியாசமாக இருந்தது அவர்களுடைய கேள்விகள் , பதில்கள் எல்லாமே ஒரு அறிவை வளர்க்க கூடியதாக இருந்தது . 

நான் நூறு நாட்கள் மட்டும் இருந்ததுக்கு காரணம் அது என்னுடைய மக்கள் மட்டுமே ,  நான் நிறைய எபிசொட் பார்க்கவில்லை தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் எல்லாம் தெரிந்து கொண்டு விட்டேன் . நான் பிக் பாஸ் வீட்டை விட்டு இப்போது தான் வந்து இருக்கிறேன் . முதல் நான் move on ஆக வேண்டும் . பழையதை போட்டு தலையை குழப்ப கூடாது . அதனால் தான் முழுமையாக நான் எபிசொட் பார்க்கவில்லை . 

பிக் பாஸ் வீட்டில நான் ரொம்ப மிஸ் பண்றது பிக் பாஸ் , ஸ்மால் பாஸ் குரல் நான் ரொம்ப மிஸ் பண்றேன் . மற்றும் என்னுடைய கட்டிலையும் மிஸ் பண்றேன் .

பிக் பாஸ் வீட்டுக்குள்ள நான் யாரையும் ஸ்ட்ராங் போட்டியாளராக பார்க்கவில்லை . காரணம் எல்லோருமே உணர்வுகள் , கோவங்கள் எல்லாமே  இருந்தது . அதை யாரும் அடக்கி வைக்கவில்லை . மற்றும் இது ஒரு கேம் என்னால முடிந்த அளவுக்கு விளையாடி இருக்கிறேன் . என்று முதலாவது பேட்டி கொடுத்துள்ளார் .

Advertisement

Advertisement