• Jan 19 2025

பவதாரிணியை தொடர்ந்து மற்றுமொரு பிரபல கலைஞர் உயிரிழப்பு!தமிழ் சினிமாவை உலுக்கும் தொடர் மரணங்கள்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பிரபலங்கள் உயிரிழப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் இளைஜராஜாவின் மகள் பவதாரிணி புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.


இந்த நிலையில், பிரபல பின்னணிக் குரல் கலைஞர் விஜயகுமார் (70) உடல்நலக்குறைவால் இன்றைய தினம் காலமானார்.

அர்னால்ட், சில்வர்ஸ்டர் ஸ்டோலன் உள்ளிட்ட ஹாலிவுட் நடிகர்களுக்கு தமிழில் குரல் கொடுத்தவர் விஜயகுமார். 


பும்பா, பென் 10 உள்ளிட்ட கார்ட்டூன் கதாபாத்திரங்களுக்கும் இவர் குரல் கொடுத்துள்ளார். 

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். 

இவரது மறைவிற்கு சினிமா துறையை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement