• Dec 08 2023

இன்னும் எத்தனை காலம் அதைப் பற்றி மட்டும் பேசுவீங்க-கொந்தளித்த அர்ச்சனாவின் மகள் சாரா

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

காமெடி டைம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பேமஸ் ஆனவர் அர்ச்சனா. இதையடுத்து திருமணம் செய்துகொண்டு சின்னத்திரையில் இருந்து சில ஆண்டுகள் விலகியே இருந்த அர்ச்சனா, பின்னர் மீண்டும் தொகுப்பாளினியாக எண்ட்ரி கொடுத்தார்.

 ஜீ தமிழில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த அர்ச்சனாவுக்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு ட்ரோல்களையும் விமர்சனங்களையும் சந்தித்தார் அர்ச்சனா. 

அதில் அன்பு தான் ஜெயிக்கும் என சொல்லி ஒரு ரியோ, அறந்தாங்கி நிஷா ஆகியோருடன் சேர்ந்து கொண்டு விளையாடி வந்த அர்ச்சனாவை அன்பு கேங் என சொல்லி கடுமையாக ட்ரோல் செய்தனர். அந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்னரும் அவரை சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வந்தனர்.


இவரது மகள் சாராவும் இணையத்தில் பிரபலமான ஒருவர் தான். சாராவுக்கு வயது குறைவு தான் என்றாலும், அவர் mature ஆக பேசும் விதத்தினை பார்த்து பலர் ஆச்சரியப்பட்டாலும், அதே காரணத்திற்காக அவரை இன்னொரு பக்கம் ட்ரோல் செய்கின்றனர்.'சாராவுக்கு இந்த வயசில் இவ்ளோ matu?' என தொடர்ந்து தன்னை பற்றி வரும் செய்திகளை பற்றி தற்போது கோபமாக பதிவிட்டு இருக்கிறார் அவர்.

இன்னும் எவ்வளவு காலத்திற்கு இதை பற்றி பேசுவீங்க என கேட்டிருக்கிறார் . மேலும் தனது வாழ்க்கையில் 8 வயதில் இருந்தே சந்தித்த பிரச்சனைகள் பற்றியும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். 

Advertisement

Advertisement

Advertisement