• Jul 04 2025

‘முத்த மழை’ பாடலுக்கு படுகிளாமர் லுக்கில் கலக்கிய ரச்சிதா..! வைரலான வீடியோ இதோ!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் தனக்கென ஓர் அடையாளத்தைப் பெற்ற நடிகை ரச்சிதா மகாலட்சுமி, தற்போதெல்லாம் வெள்ளித்திரையில் மட்டுமல்ல, சமூக வலைத்தளங்களிலும் அதிக ரீச் பெற்ற நடிகையாகப் பளிச்சென்று வருகின்றார். சமீபத்தில் அவர் பதிவிட்ட ‘தக் லைஃப்’ படத்தின் ‘முத்த மழை’ பாடலுக்கான ரீல்ஸ் வீடியோ, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


அழகிய சேலையில், நெகிழ்ச்சியாக காட்சியளிக்கும் அந்த வீடியோ, ரசிகர்களை ஒரே நேரத்தில் மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஆக்கியுள்ளது. ரச்சிதா மகாலட்சுமி, தமிழ் ரசிகர்களுக்கு முதலில் தெரிந்தது 'சரவணன் மீனாட்சி' தொடர் மூலம். 

அதில் அவர் ‘மீனாட்சி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தது அவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. இந்த தொடரின் மூலம் ரசிகர்கள் மனதில் ஓர் இடத்தை பிடித்த அவர், பின்னர் கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் போன்ற சேனல்களின் தொடர்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.


தற்போது ரச்சிதா மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘தக் லைஃப்’ படத்தில் இடம்பெற்ற ‘முத்த மழை’ என்ற மென்மையான பாடலுக்கு ரீல்ஸ் செய்த வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களுக்குள்ளேயே அதிகளவான ரீச்சினைப் பெற்றது. ரசிகர்கள் மட்டுமல்லாமல், சில பிரபலங்களும் அந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement