• Jul 05 2025

சின்மயி விவகாரத்தில் சர்ச்சை..! மனமுடைந்து பேசிய ராதாரவி..

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

சமீபத்தில் வெளியான தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாடகி சின்மயி பாடிய "முத்தமழை" பாடல் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. அந்த பாடல் யூடியூபில் டாப் டிரெண்டிங்கில் இடம்பிடித்து ரசிகர்களின் பேவரெட் பாடலாக மாறியுள்ளது.


இதன் பின்னணியில் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக சின்மயி மீது விதிக்கப்பட்ட 'Ban' விவகாரம் மீண்டும் ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது. இதற்கான காரணமாக நடிகர் ராதா ரவி தான் என்று சமூக வலைதளங்களில் பலர் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.


இந்த விவகாரத்துக்கு ராதாரவி நேரடியாக பதிலளித்துள்ளார். அதாவது “சின்மயி பாட்டு பாட நான் தடை போட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அது உண்மை கிடையாது. நான் டப்பிங் யூனியனுக்கு தான் தலைவராக இருந்தேன். ஆனால் அவர் பாடுவதற்கு தடை விதித்தது மியூசிக் யூனியன். டப்பிங் யூனியனுக்கும் அதற்கும் சம்பந்தம் கிடையாது.” என தெரிவித்துள்ளார்.மேலும் “200 யூனியன்கள் இருக்கும் இடத்தில் எல்லா முடிவுகளுக்கும் நான் காரணம் இல்லை. எல்லாம் இஷ்டத்துக்கு பேசுகிறார்கள் என்ன சொல்ல முடியும்” என்று ராதா ரவி வேதனையுடன் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement