தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் மற்றும் நடிகருமான பாக்கியராஜ் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கேப்டன் விஜயகாந்த் பற்றிக் கூறியுள்ளார். அதில் அவர் கூறுகையில் "விஜயகாந்தைத் திரைப்படத்துறைக்கு அறிமுகபடுத்தியது நான் தான்" எனக் கூறியுள்ளார். இந்த தகவல் அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜயகாந்த் அரசியல் மட்டுமின்றி திரைப்பயணத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். ஆனால், திரையுலகில் அவர் நுழைந்த விதம் குறித்த எந்த தகவல்களும் இதுவரை வெளிவரவில்லை. தற்போது, பாக்கியராஜ் கூறிய தகவல் ரசிகர்களிடையே புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் "விஜயகாந்த் அவர்களை திரைப்படத்துறைக்கு அறிமுகப்படுத்த நான் முக்கியமான காரணமாக இருந்தேன். அவர் ஒரு சிறந்த நடிகராக வளர்ந்து கேப்டன் என்று ரசிகர்கள் கொண்டாடும் நிலைக்கு வந்தது எனக்கு பெருமை அளிக்கிறது" என்றார் பாக்கியராஜ்.
பாக்கியராஜ், திரையுலகில் பல்வேறு நடிகர்களை உருவாக்கியவர். அவரது இயக்கத்தில் நடித்த பலரும் பிரபலமான நடிகர்களாக உருவாகியுள்ளனர். விஜயகாந்தும் அதில் ஒருவராக இருக்கலாம் என்று தற்போது பல ரசிகர்கள் கமெண்டில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பாக்கியராஜின் இந்த கருத்து, விஜயகாந்த் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவருடைய திரையுலகப் பயணத்தில் பாக்கியராஜ் பங்கு வகித்திருப்பதனை அனைத்து ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.
Listen News!